Home /News /education /

JEE அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானது

JEE அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானது

ஜேஇஇ அட்வான்ஸ்   தேர்வு முடிவுகள்

ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள்

ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகளை https://result.jeeadv.ac.in/ என்ற இணைய பக்கத்தில் காணலாம். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |
    ஐஐடி சேர்க்கைக்கு தகுதி பெறுவதற்கான ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகளை ஐஐடி மும்பை இன்று வெளியிட்டது. ஐஐடி மும்பை மண்டலத்தில் இருந்து விண்ணப்பித்த ஆர்.கே சிசிர் 314 மதிப்பெண்களுடன் நாட்டின் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.

    ஐஐடி சென்னை, மும்பை போன்ற இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் உள்ள இளநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ஜேஇஇ அட்வான்ஸ் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. ஜேஇஇ முதன்மைத் தேர்வு (JEE Mains) மதிப்பெண் தரவரிசைப் பட்டியலில் முதல் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே இந்த தேர்வுக்கு தகுதியுடையவராக கொள்ளப்படுகின்றனர்.

    2022-23 கல்வியாண்டிற்கான நுழைவுத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி நடைபெற்றது. 2.5 லட்சம் மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், வெறும் 1.6 லட்சம் மாணவர்கள் மட்டுமே ஐஐடி சேர்க்கைக்கு விண்ணப்பித்திருந்தனர்.  ஐஐடிகளில் உள்ள 16,598 இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    தேர்வு முடிவுகள்: 

    ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகளை https://result.jeeadv.ac.in/ என்ற இணைய பக்கத்தில் காணலாம்.

    தேர்வர்கள், 7 எண்கள் கொண்ட விண்ணப்பப் பதிவெண், பிறந்த தேதி, மொபைல் நம்பர் ஆகியவற்றை உள்ளிட்டு மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    சிறந்த ஐஐடி கல்லூரி:

    முன்னதாக, மத்தியக் கல்வி அமைச்சகம் உயர்கல்வி நிறுவனங்களுக்கான இந்தியா தரவரிசை பட்டியலை வெளியிட்டது.  அதில், முதல் 10 இடங்கள் வந்த ஐஐடி நிறுவனங்கள் குறித்த விவரம் பின்வருமாறு;

    முதலிடம் : ஐஐடி சென்னை

    இரண்டாமிடம் :ஐஐடி டெல்லி

    மூன்றாமிடம் : ஐஐடி மும்பை

    நான்காவது இடம் :ஐஐடி கான்பூர்

    ஐந்தாவது இடம் : ஐஐடி கோரக்பூர்

    ஆறாவது இடம் : ஐஐடி ரூர்கே

    ஏழாவது இடம் : ஐஐடி கவுகாத்தி

    எட்டாவது இடம் : என்ஐடி திருச்சி

    ஒன்பதாவது இடம் : ஐஐடி ஹைதராபாத்

    பத்தாவது இடம் : என்ஐடி கர்நாடகா

    இந்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கையின் படி, 10% இடங்கள் பொது பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கு (GEN-EWS) ஒதுக்கப்பட்டுள்ளது. 15% இடங்கள் பட்டியல் பரிவனருக்கும் (SC), 7.5% பட்டியல் பழங்குடியினருக்கும் (51) மற்றும் 27% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (OBC-NCL) ஒதுக்கப்பட்டுள்ளது
    Published by:Salanraj R
    First published:

    Tags: Jee

    அடுத்த செய்தி