முகப்பு /செய்தி /கல்வி / நேரு பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு பேச்சுப் போட்டி - தமிழக அரசு அறிவிப்பு..!

நேரு பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு பேச்சுப் போட்டி - தமிழக அரசு அறிவிப்பு..!

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

ஜவகர்லால் நேருவின் கருத்துக்களையும் சமூகச் சிந்தனைகள் குறித்தும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக நடத்தும் பேச்சுப் போட்டி நடைப்பெறவுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜவகர்லால் நேருவின் கருத்துக்களையும், சமூகச் சிந்தனைகளையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி / கல்லூரி மாணவ, மாணவியரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் வரும் 14.11.2022 (திங்கள்கிழமை) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளன.

சென்னையில் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய மூன்று இடங்களில் இந்தப் பேச்சுப்போட்டிகள் நடத்தப்படும். ஒரே நாளில் சென்னை உட்பட 38 மாவட்டங்களிலும் இப்போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் நடைப்பெறும் இடம்:

பள்ளி மாணவர்களுக்கு வட சென்னையில் அரசு உயர்நிலைப் பள்ளி, வில்லிவாக்கம், சென்னை - 600 049 லும், தென் சென்னையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அசோக்நகர், சென்னை - 600 005லும், மத்திய சென்னையில் செயகோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை-600015லும் பேச்சுப்போட்டிகள் நடைபெறும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கு வட சென்னையில் டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரி வியாசர்பாடி, சென்னை - 600039லும், தென் சென்னையில் இராணிமேரிக் கல்லூரி, சென்னை - 600005லும், மத்திய சென்னையில் பாரதி மகளிர் கலைக் கல்லூரி பிராட்வே, சென்னை- 600001லும் பேச்சுப்போட்டிகள் நடைபெறும்.

போட்டிகான தலைப்புகள்:

பள்ளி மாணவர்களுக்கான தலைப்புகள்

1) குழந்தைகள் தின விழா

2) ரோசாவின் ராசா

3) ஜவகர்லால் நேருவின் தியாகங்கள்

4) நூல்களைப் போற்றிய நுண்ணறிவாளர் நேரு

5) அண்ணல் காந்தியின் வழியில் பண்டிதர் நேரு

6) இளையோர்களின் வழிகாட்டி சவகர்லால் நேரு

கல்லூரி மாணவர்களுக்கான தலைப்புகள்

1) இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு

2) பிரதமர் நேரு கட்டமைத்த இந்தியா

3) அண்ணல் காந்தியும் பண்டிதர் நேருவும்

4) நேருபெருமகனாரின் பஞ்சசீலக் கொள்கை

5) உலக அமைதிக்கு பண்டிதர் நேருவின் தொண்டு

6) அமைதிப்புறா - ஜவகர்லால் நேரு ஆகியன ஆகும்.

Also Read : 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - முழு விவரம்

பரிசுகள் விவரங்கள்:

பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு

முதல் பரிசு ரூ.5000/-

இரண்டாம் பரிசு ரூ.3000/-

மூன்றாம் பரிசு ரூ. 2000/-

சிறப்புப் பரிசாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ரூ. 2000/- வீதம் இரண்டு பேருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- என வழங்கப்பெறும்.

First published:

Tags: College, Jawaharlal Nehru, Tn schools