Home /News /education /

தனியார் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் - தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

தனியார் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் - தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Tamil Nadu Private Schools | சொத்துவரி முறையாக கட்டாத தனியார் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அளித்து அந்தந்த பள்ளிகள் செயல்படும் மாநகராட்சி ,நகராட்சி, பேரூராட்சி அமைப்புகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் 

தனியார் பள்ளிகளை நடத்தும் நிர்வாகங்கள்  பள்ளிகளுக்கான சொத்து வரியை ஆண்டுதோறும்  செலுத்த வேண்டும். அவ்வாறு  சொத்து வரி செலுத்தாத காரணத்தால்  தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு அரசு சார்பில் ஜப்தி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. சொத்து வரி செலுத்த தவறியதால் சொத்துக்களை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு ஜப்தி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

சொத்து வரிகள் கட்டாத அனைத்து தனியார் பள்ளிகளும் சீல்வைத்து ஜப்தி செய்யப்படும் என்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்களை கண்டித்து வருகிற 26 ம் தேதி மாபெறும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழகத்தில் அரசின் அங்கிகாரம் பெற்று நடைபெற்று வரும் தனியார் பள்ளிகள் மட்டும் சொத்து வரி கட்ட வேண்டும் என்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகரிகள் திடீர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சொத்து வரி கட்டாத பள்ளிகளுக்கு சீல் வைத்து உடனடியாக ஜப்தி செய்யப்படும் என்று கால அவகாசம் அளிக்காமல், நோட்டீஸ் அளித்திருப்பது பள்ளி உரிமையாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Also Read : திருநங்கைகளுக்கு கல்லூரியில் ஒரு இலவச சீட்..! - சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

மேலும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவலால் அமலில் இருந்த ஊரடங்கால் பள்ளிகள் முறையாக இயங்காத நிலையில், மாணவர்களும் முழுமையாக கல்வி கட்டணத்தை செலுத்தவில்லை. இப்படி இருக்கும நிலையில் பள்ளி நிர்வாகங்கள் நிதி நெருக்கடியில் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் எவ்வித கால அவகாசமும் தராமல் உடனடியாக சொத்து வரி கட்ட வேண்டும், இல்லையெனில் பள்ளிகள் சீல்வைத்து ஜப்த்தி செய்யப்படும் என்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்தும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், வருகிற 26 ம் தேதி சென்னை வள்ளூவர்கோட்டம் அருகே அனைத்து தனியார் பள்ளி நிர்வாகிகளும் மாபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.

Also Read : நீட் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரங்கள் இல்லை - தேசிய தேர்வு முகமை

ஒவ்வொரு  தனியார் பள்ளியும் கடந்த ஐந்தாணடுகளாக 6 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை சொத்துவரி செலுத்தாமல் உள்ளது. இதனை வசூலிக்கும் விதமாக தற்போது தமிழக அரசு ஜப்தி நடவடிக்கையை முடுக்கி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரொனோ சூழ்நிலையால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த தோடு பள்ளி கட்டணம் முறையாக வசூலிக்கவில்லை என்று கூறியுள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் இத்தகைய கடினமான சூழ்நிலையில் ஜப்ததி நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு இருப்பதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Published by:Vijay R
First published:

Tags: School, Tamil Nadu government

அடுத்த செய்தி