முகப்பு /செய்தி /கல்வி / ஐடிஐ முடித்தவர்கள் 10, 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்!

ஐடிஐ முடித்தவர்கள் 10, 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்!

காட்சிப்படம்

காட்சிப்படம்

விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் (SOP) ஆகியவை www.skiltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,  கடந்த 2022 மார்ச் மாதம் 30ம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையின் படி, தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்கத்தால் நடத்தப்பெற்ற மொழித் தேர்வில் தனித் தேர்வர்களாக தேர்ச்சி பெற்ற விண்ணப்பத்தாரர்களுக்கு 10ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC/ NAC பெற்றவர்கள்,  கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு தேர்வுகள் இயக்கத்தால் நடத்தப்பெற்ற 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 10ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம். அதேபோன்று,   10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC/ NAC பெற்றவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு தேர்வுகள் இயக்கத்தால் நடத்தப்பெற்ற 11 மற்றும் 12ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தனித் தேர்வர்களாக தேர்ச்சி பெற்றவர்கள் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் (SOP) ஆகியவை www.skiltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதனை பின்பற்றி விண்ணப்பதாரரின் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ 28.02.2023 தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கூறியுள்ளது. 

First published:

Tags: ITI, ITI Students