Home /News /education /

750 அரசுப் பள்ளி மாணவிகள் வடிவமைத்த 'அஸாதிசாட் செயற்கைகோள்': நாளை விண்ணில் பாய்கிறது!

750 அரசுப் பள்ளி மாணவிகள் வடிவமைத்த 'அஸாதிசாட் செயற்கைகோள்': நாளை விண்ணில் பாய்கிறது!

காட்சிப் படம்

காட்சிப் படம்

நாட்டின் 75வது சுதந்திர பெருவிழாவை கொண்டாடும் வகையில், இந்தியாவின் மூவர்ணக் கொடியை இந்த சிறிய வாகனம் மூலம் விண்வெளியில் பறக்க விட இஸ்ரோ முடிவெடுத்துள்ளது

    75 வது ஆண்டு சுதந்திர பெருவிழாவை குறிக்கும் வகையில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 750 மாணவர்களின் பங்கேற்புடன் கூடிய அஸாதிசாட் செயற்கோள் நாளை காலை விண்னில் ஏவப்படுகிறது.  இந்த செயற்கை கோள் வடிவமைக்கும் பணியில், தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் பயிலும் 30 மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

    முன்னதாக,  கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர்  நரேந்திர மோடி, " நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது, மனிதர்களுடன் கூடிய விண்கலத்தைச் செலுத்தும். விண்வெளியில் இந்திய கொடி ஏற்றப்படும்" என்று தெரிவித்தார். இருப்பினும், கொரோனா நோய்த் தொற்று பொது முடக்கநிலை காரணமாக ககன்யா திட்டம் தாமதம் அடைந்தது. 

    இதற்கிடையே, தனியார் பங்களிப்புடன்  சிறிய செயற்கைக்கோள் செலுத்தும் வாகனத்தை (Small Satellite Launch Vehicle) தயாரித்து வந்தது. இந்த ராக்கெட் வாகனம் அதிகபட்சமாக 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை 500 கி.மீ. வரை சுமந்து சென்று சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் வகையில் தயாரிக்கபபட்டுள்ளது. வணிக நோக்கத்தில் இந்த சிறிய செயற்கோள் வாகனம் இஸ்ரோவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில்,  நாட்டின் 75வது சுதந்திர பெருவிழாவை கொண்டாடும் வகையில், இந்தியாவின் மூவர்ணக் கொடியை இந்த சிறிய வாகனம் மூலம் விண்வெளியில் பறக்க விட இஸ்ரோ முடிவெடுத்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நாளை காலை 9:18 மணிக்கு சிறிய ராக்கெட் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தலைவர்  சோம்நாத் தெரிவித்துள்ளார். மேலும், சிறிய வகை ராக்கெட்டுகளை வர்த்தக முறையில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு அறிக முக்கியத்துவம் தரப்படும் என்றும் கூறினார்.

    மேலும், இந்த சிறிய ராக்கெட் வாகனத்தில் இருந்து, 750 மாணவிகளின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட  அஸாதிசாட் செயற்கோள்  விண்ணில் ஏவப்படுகிறது.   

    இந்த அஸாதிசாட் செயற்கோளில் 75 விதமான கருவிகள் செயல்பட உள்ளன. இதில் முக்கியமானது  EOS-02 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இதிலுள்ள, ஆப்டிகல் ரிமோட் சென்சிங் வசதிகள் மூலம் வெப்ப முரண்பாடுகள் பற்றிய வெப்ப தகவலை  பெற முடியும். விவசாயம், வனவியல், புவியியல், நீரியல், மின்சக்தி மின்னணுவியல், எதிர்வினை சக்கரங்கள் போன்ற பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுக்கான செயற்கைக்கோளாகவும் இது உள்ளது.

    அஸாதிசாட் செயற்கைகோள் Space Kidz India என்ற நிறுவனத்தின் முயற்சியாகும்.  நாடு முழுவதும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் உள்ள 75 அரசுப் பள்ளிகளில் பயிலும் 750  மாணவிகளுக்கு முறையாக பயிற்சி அளித்து இந்த செயற்கை கோள் உருவாக்கப்பட்டதாக Space Kidz India என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த முயற்சியை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியாயர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: ISRO

    அடுத்த செய்தி