ஹோம் /நியூஸ் /கல்வி /

ஜனவரி 18 பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்னது இதுதான்

ஜனவரி 18 பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்னது இதுதான்

அமைச்சர் அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 18 ஆம் தேதி பள்ளிகள் விடுமுறை என்ற தகவல் வெளியான நிலையில் அது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு தற்போது பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் 17ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 14 போகிப் பண்டிகை, ஜனவரி 15 பொங்கல் பண்டிகை , 16ம் தேதி மாட்டுப் பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

பொங்கல் பண்டிகை கொண்டாட ஏராளமான மக்கள் சொந்த ஊர் சென்றுள்ளதால் பள்ளிகளுக்கான விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பொங்கல் விடுமுறைக்கு பிறகு புதன்கிழமை (ஜனவரி 18) பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதனால் பொங்கல் பண்டிகை முடிந்து ஜனவரி 18 பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். பொங்கலுக்கு சொந்த ஊர் திரும்ப பொதுமக்களுக்கு ஏதுவாக ஜனவரி 18 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வதந்தி ஒன்று காட்டுதீ போல் பரவியதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு அனைவரது சந்தேகத்தையும் தீர்த்துள்ளது.

First published: