10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்
(கோப்புப் படம்)
  • Share this:
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ள நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையம் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் நடமாடும் காய்கறி வாகனம் மற்றும் 24 மணிநேர ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தனர்.

அதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அமைச்சர்செங்கோட்டையன்,


ஈரோடு மாவட்டத்தில் 90 பேரை தனிமைப்படுப்பட்டுள்ளதாகவும் இதில் 28 பேருக்கு உறுதி செய்யப்பட்டதாகவும் 53 பேர் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

30 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஈரோடு மாவட்டத்தில் தற்போது குறைந்து வருவதாகவும்“ தெரிவித்தார்.

ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பார்“ என்றார்.தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் ஊரடங்கு காரணமாக வினாத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. மேலும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வின் இறுதியில் மாணவர்கள் பலர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டதால் அந்த தேர்வு மீண்டும் நடத்தப்படும் சூழலும் நிலவி வருகிறது.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading