Home /News /education /

யூஜிசி முக்கிய அறிவிப்பு.. இளங்கலை மாணவர்களுக்கு உள்ளுறைப் பயிற்சி கட்டாயம்..

யூஜிசி முக்கிய அறிவிப்பு.. இளங்கலை மாணவர்களுக்கு உள்ளுறைப் பயிற்சி கட்டாயம்..

யுஜிசி

யுஜிசி

UGC Announcement: ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒருங்கிணைப்பே சுய-சார்பு இந்தியாவின் அடித்தளமாக உள்ளது - யுஜிசி

    உயர் கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறையினருக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர்கள் அனைவரும்  ஆராய்ச்சி உள்ளுறைப் பயிற்சிகளை (research internship) மேற்கொள்ள வேண்டும்  என்று பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அறிவித்துள்ளது.

    இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒருங்கிணைப்பே சுய-சார்பு இந்தியாவின் அடித்தளமாக உள்ளது.  இந்த புதிய முயற்சி  தேசிய கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்ட உயர்கல்வியில் நெகிழ்வுத் தன்மை/பன்முகத் தன்மையை  நிறுவனமயமாக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்தது.

    பல்முனை நுழைவு, வெளியேறுதல் அடிப்படையிலான 4 ஆண்டு கால இளநிலை பட்டக் கல்வியை தேசிய கல்விக் கொள்கை முன்னெடுக்கிறது. இதன்கீழ், ஓராண்டுக்குப் பின்னர் சான்றிதழ் பட்டத்துடன், 2 ஆண்டுக்குப் பின்னர் மேம்பட்ட டிப்ளமோ படிப்புடன், 3 ஆண்டுக்குப் பின்னர் இளநிலைப் பட்டத்துடன், 4 ஆண்டுகளுக்குப் பின்னர் பட்டத்துடன் கூடிய ஆராய்ச்சி சான்றிதழுடன்  மாணவர்கள் படிப்பை முடிக்கலாம்.

    யுஜிசியின் புதிய  நெறிமுறைகளின் படி " சான்றிதழ் அல்லது மேம்பட்ட டிப்ளோமா படிப்புடன் வெளியேற விரும்பும் மாணவர்கள் 2வது அல்லது 4வது செமஸ்டருக்குப் பிறகு, கட்டாயம் 8-10 வாரங்கள்  ஆராய்ச்சி உள்ளுறைப் பயிற்சியை  மேற்கொள்ள வேண்டும்.

    ராணுவ கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள்

    நான்கு ஆண்டு கால படிப்பில், பட்டத்துடன் கூடிய ஆராய்ச்சி சான்றிதழ் பெற விரும்பும் மாணவர்கள், கட்டாயம் 10 வாரங்கள் ஆராய்ச்சி உள்ளுறைப் பயிற்சியை முடித்திருக்க வேண்டும். நான்கு ஆண்டு கால  இளங்கலை பட்டம் (ஆராய்ச்சி இல்லாமல்) பெற விரும்பும் மாணவர்கள், குறைந்தபட்சம் 8-10 வாரங்கள் உள்ளுறைப் பயிற்சியை முடித்திருக்க வேண்டும்" என்று  தெரிவித்துள்ளது.     

    முன்னதாக, வாழ்நாள் முழுவதும் படிப்பதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், கற்போரிடையே சிக்கலான மற்றும் பல்துறை சிந்தனையை ஏற்படுத்தவும்,  ஒரே நேரத்தில் இரண்டு பாடப் பிரிவுகளை படிக்கும் திட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைகழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்டது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Education

    அடுத்த செய்தி