Home /News /education /

அயல்நாட்டு கற்றல் செயற்பாடுகளை மதிப்பிட 4 பேர் கொண்ட குழு : யுஜிசி

அயல்நாட்டு கற்றல் செயற்பாடுகளை மதிப்பிட 4 பேர் கொண்ட குழு : யுஜிசி

யுஜிசி

யுஜிசி

அதிகளவிலான பன்னாட்டு உயர்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் செயற்பட விருப்பும் தெரிவித்து வருகின்றன.

    அயல்நாடுகளில் பெறப்படும் பட்டங்கள் மற்றும் உயர்கல்வித் தகுதிகளை மதிப்பிடுவதற்கான குழுவை பல்கலைக்கழக மானியக் குழு அமைத்துள்ளது.

    உயர்கல்வியை பன்னாட்டுமயமாக்கல் வேண்டும் என்ற விருப்பத்தை தேசியக் கல்விக் கொள்கை முன்னெடுக்கிறது. அதன்படி, வெளிநாட்டு மாணவர்கள் தங்களது தரமதிப்பீடுகளை மாற்றம் செய்து (Credit Transfer) இந்திய உயர்க்கல்வி நிறுவனங்களில் படிக்க, ஆராய்ச்சி மேற்கொள்ள, இந்தியாவிலேயே நிலைநிறுத்திக் கொள்ள வழிவகை செய்கிறது.

    இந்த குழு தனது அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயல்நாட்டு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மதிப்பிடுதல், அங்கு ஈட்டப்பட்ட தரமதிப்பீடுகளை இந்தியாவுக்கு மாற்றுதல், நியமன செயல்முறையை தீர்மானித்தல், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடனான தெடர்பை அதிகரித்தல் ஆகியவற்றிற்கான பரிந்துரையை இந்த குழு அளிக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

    பன்னாட்டுமயமாக்கல்:  இதற்கிடையே, அயல்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இரட்டை பட்டங்கள்(இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஒரே நேரத்தில் இரண்டு பாடப் பிரிவுகளை படிக்கும் திட்டம் ), இணை பட்டங்கள் (இந்தியா - வெளிநாட்டு நிறுவனங்கள் இனைந்து பாடப் பிரிவுகளை வழங்குதல்), இரட்டை ஏற்பாடுகள் (Twinnig Programe - முதல் பாதியை இந்தியாவிலும், அடுத்த பாதியை அயல்நாட்டிலும் தொடரலாம்) மற்றும் பிற முறைகளை அனுமதிக்கும் ஒழுங்குமுறையை  பல்கலைக்கழக மானியக் குழு  முன்னதாக அறிவித்தது.

    இந்த ஒழுங்குமுறை வெளியாவதற்கு பின்பு, அதிகளவிலான பன்னாட்டு உயர்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் செயற்பட விருப்பும் தெரிவித்து வருகின்றன. ஸ்காட்லாந்து கிளாஸ்கோ பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவை அணுகியதாக கூறப்படுகிறது.

    முன்னதாக, இந்தியாவில் தனது உயர்க்கல்வி நிறுவனங்களை செயற்பட விரும்புவதாக    பிரான்ஸ் நாடு தெரிவித்திருந்தது. மேலும், வடிவமைப்பு, மேலாண்மை  படிப்பில் ஆதிக்கம் செலுத்தி வரும் இத்தாலியின்  Istituto Marangoni இந்தியாவில் தன்னாட்சி பொருந்திய கல்வி நிறுவனமாக இயங்க ஆர்வம் தெரிவித்திருந்தது.

    கடந்த பட்ஜெட்  உரையின் போது பேசிய மத்திய நிதியமைச்சர், "கிஃப்ட் நகரத்தில் (Gujarat Gift City) உலகத் தரம் வாய்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் தொடங்க அனுமதிக்கப்படும். இவை நிதி மேலாண்மை, நிதிசார் தொழில்நுட்பம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியல் துறைகளில் பாடப் பிரிவுகளை வழங்கும். உள்நாட்டு நெறிமுறைகள் இவற்றை கட்டுப்படுத்தாது என்று தெரிவித்தார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Education

    அடுத்த செய்தி