தமிழக அரசின் உத்தரவை அடுத்து பள்ளிகளை துய்மைபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,
நெல்லை பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிகளை திறப்பதை வரவேற்று, அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
கொரோனா தோற்று பரவலை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்தது. அதில் ஒரு பகுதியாக பள்ளிகள் நேரடியாக செயல்பட தடை விதித்து உத்திரவிட்டது. தற்போது கொரோனா தோற்று குறைந்து வருவதையடுத்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
மேலும், பிப்ரவரி 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து பள்ளிகளை தயார் செய்யும் பணியினை பள்ளி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. நெல்லை டவுணில் உள்ள அரசு பள்ளியில் வகுப்பரை மாணவர்கள் அமரும் பெஞ்ச் மற்றும் மேஜைகளை சுத்தம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதே போல தமிழக அரசு, பள்ளிகளை திறக்க உத்திரவிட்டதற்கு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வரவேற்றதோடு, நன்றியும் தெரிவித்தனர். ஆன்லைன் வகுப்பு மூலம் வகுப்புகள் நடைபெற்றாலும் நேரடி வகுப்பையே தாங்கள் விரும்புகிறோம் என்று மாணவர்கள் கூறினர்.
Must Read : நகர்புற உள்ளாட்சி தேர்தல் : பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை
மேலும், பள்ளிகள் திறக்கப்படுவதால், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க முடியும் என்பதால் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
செய்தியாளர் : ஐயப்பன், திருநெல்வேலி.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.