பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று: பொது சுகாதாரத்துறை இயக்குநரின் உத்தரவு

மாதிரிப்படம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் மாணவர்கள், ஆசிரியர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை.

 • Share this:
  பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டாலும் அவருடைய வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களையும், ஆசிரியரையும் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர்களை ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

  தமிழகத்தில் பள்ளிகளும், கல்லூரிகளும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டதை தொடர்ந்து ஓரிரு இடங்களில் மாணவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் வகுப்புகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா தொற்று ஏற்பட்ட மாணவர்களிடம் தொடர்பில் இருந்த மாணவர்களும், ஆசிரியர்களும் கட்டாயம் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் நெகட்டிவ் என வந்தாலும் அடுத்த 14 நாட்கள் அவர்களுக்கு அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் அல்லது ஊழியர்கள் வருவதற்கும், போவதற்கும் தனி வாயில்களை ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றுக்கும் அதிகமான வகுப்புகளில் நோய்த் தொற்று கண்டறியப்பட்டால் அடுத்த 3 முதல் 5 நாட்களை வரை பள்ளிகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் மாணவர்கள், ஆசிரியர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

  இந்நிலையில் கோவை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மாணவர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டையில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 3 மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு தொற்று உறுதியானதால் அவர்கள், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து பள்ளியை தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக மாணவர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. அத்துடன் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் சகோதரிகள் இருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. அதனால் மாணவ மாணவிகள் 403 பேர் உள்பட ஆசிரியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

  Must Read : நீட் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறு தேர்வு எழுத ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்

  திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பள்ளிக்கு ஒரு வாரத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: