முகப்பு /செய்தி /கல்வி / இந்தோ - தீபெத்தின் எல்லைப் பாதுகாப்புப் படை என்றால் என்ன? எதற்காக ஏற்படுத்தப்பட்டது?

இந்தோ - தீபெத்தின் எல்லைப் பாதுகாப்புப் படை என்றால் என்ன? எதற்காக ஏற்படுத்தப்பட்டது?

இந்தோ திபெத்திய எல்லை காவல் படை

இந்தோ திபெத்திய எல்லை காவல் படை

கடந்த 2016ம் ஆண்டு முதல் அனைத்து  போர் பொறுப்புகளிலும் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

இது எல்லையை பாதுகாக்கும் ஒரு காவல்படையாகும். அதிக உயரமான பகுதிகளில் செயல்படுவதில் சிறப்பு வாய்ந்தது. இந்திய-சீனா எல்லைப் பகுதிகளை காக்கும் பணிக்காக இது பயன்படுத்தப்படுகிறது.

வரலாறு:

இந்தியாவுக்கும், சீனாவுக்கும்  இடையே நடைபெற்ற   மோதலுக்குப் பிறகு, 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) அமைக்கப்பட்டது .  லடாக் பகுதியிலுள்ள கரகோரம் கணவாய் முதல் அருணாசலப் பிரதேசம் ஜசிப் லா என்ற இடம் வரையுள்ள 3488கி.மீ இந்திய-சீன எல்லையை இந்த படை பாதுகாக்கிறது. பனிப்புயல், பனிப்பாறை சரிவுகள், நிலச்சரிவுகள் போன்ற இயற்கை சீற்றங்களுடன் -40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும் 9000 முதல் 18000 அடி உயரத்தில் எல்லையை காக்கிறார்கள். இமய மலைப்பகுதியில் தனி பிணைப்பு மற்றும் உயர் மலைப் பிரதேசத்தில் செயல்படும் வலிமையில் இந்தோ திபெத்திய எல்லை காவல் படை தனித்து நிற்கிறது.

தொடக்க காலத்தில் இந்தோ - தீபெத் எல்லையில்   கள்ளக் கடத்தல், ஊடுருவல், உளவாளிகளின் நடமாட்டம் இவற்றைத் தடுப்பது  இந்த படையின் முதன்மை  பணியாக இருந்து வந்தன.   

ஆனால், தற்போது படை விரிவாக்கத்தின் விளைவாக,  இயற்கைப் பேரிடர்கள் போன்ற  நெருக்கடியான தருணங்களின் போது, நாட்டு மக்களைப் பாதுகாப்பதில் இப்படை  மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

 உங்களுக்குத் தெரியுமா?துணை ராணுவப் படையில் இருந்த பின்வரும் ஐந்து படைப்பிரிவுகள் மத்திய ஆயுத காவல்படையாக மறுவரையறை செய்யப்பட்டு மார்ச் 2011, முதல் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.1. மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF)2.எல்லை பாதுகாப்புப் படை (BSF)3.இந்தோ - திபெத்திய எல்லைக் காவல் (ITBP)4.மத்திய தொழிலக காவல் படை (CISF)5.சிறப்பு சேவை பணியகம் (SSB )

ஆரம்ப காலகட்டங்களில், பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த 1471 வீரர்களை ஒருங்கிணைத்து நான்கு படைப்பிரிவுகளாக (Battalions) செயலாற்றி வந்தது. பின்னர், எல்லை பகுதிகளில் இந்த படையின் பங்களிப்பை அதிகப்படுத்தும் விதமாக மலைப் பிரேதேசத்தில் வாழும்  உள்ளூர் இளைஞர்களை பணியமர்த்தி படையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது.  1965, 1971 ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த மோதல்களில் இந்தியா வெற்றி பெற்றதில் இப்படைகளின் பங்கு முக்கியத்துவம்  வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

எல்லைப் பகுதிகளில் காணப்படும் தொடச்சியான அச்சுறுத்தலை போக்கும் வகையில், 1978ம் ஆண்டு  இப்படையை மறுகட்டமைத்து மறுசீரமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி, 9 படைப்பிரிவுகள், 4 சிறப்பு  படைப்பிரிவுகள், 2 பயிற்சி மையங்கள் கொண்டதாக  இப்படை  வலுப்பெற்றது. ஒரே நாடு, ஒரே எல்லை, ஒரே படை என்ற கொள்கையின் கீழ், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் செயலாற்றி வந்த அசாம் ரைபிள்ஸ் படையின் பணிகள் இதற்கு கீழ் கொண்டு வரப்பட்டன . தற்போது, 56 படைப்பிரிவுகளுடன் இப்படை செயலாற்றி வருகிறது.

Sanjay Arora, IPS (TN-88) - இப்படையின் தலைமை இயக்குனராக உள்ளார்

இந்தோ - தீபெத்தின் எல்லைப் பாதுகாப்புப் படையில்,  கடந்த 2016ம் ஆண்டு முதல் அனைத்து  போர் பொறுப்புகளிலும் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால்,  இந்த நியமனங்கள் பெரும்பாலும் constabulary ranks அளவில் தான் இருந்து வந்தன. கடந்த 2021ம் ஆண்டு தம்மி மற்றும் தேஸ்வால் என்ற இரு பெண்கள்  முதன்முறையாக Assistant Commandant  சேவையில்  நியமிக்கப்பட்டனர்.

இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனை:

லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 38,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 5,180 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை “சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் 1963-ன்” படி பாகிஸ்தான் சீனாவுக்கு சட்ட விரோதமாக கொடுத்துள்ளது  அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்தியா-சீனா கிழக்கு எல்லைப் பகுதியில் சுமார் 90,000 ச.கி.மீ பகுதியும் தன்னுடையது என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.

எல்லைப் பிரச்சினை மிகவும் சிக்கலானது என்பதால், அதனை அமைதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வதற்கு பொறுமை மிகவும் அவசியம் என இந்தியாவும், சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன என்ற போதிலும், இருதரப்புக்கும் பொதுவான உண்மையான கட்டுப்பாட்டு கோடு (LAC) இல்லாததால், எல்லையில் அமைதியைப் பராமரிக்க பல்வேறு உடன்படிக்கைகளை இருநாடுகளும் வகுத்து, நடைமுறைகளைப் பின்பற்றி  வருகின்றனர்.

1993 மற்றும் 1996 உடன்படிக்கைகளின்படி, எல்ஏசி நெடுகிலும், இருதரப்பு பகுதியில் குறைந்தபட்ச அளவுக்கு தங்கள் படைகளை நிறுத்திக்கொள்ளலாம்.  எல்ஏசி-யை இருதரப்பும் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஒப்புகொள்ளப்பட்டது.

First published:

Tags: ITBP, TNPSC, UPSC