உலகின் தலைசிறந்த அமெரிக்க கல்லூரியில் நிதியுதவியுடன் உயர் கல்வியை தொடர்வதற்காக வாய்ப்பை பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் Lafayette College of America என்ற உயர்கல்வி நிறுவனம், உலகளவில் 6 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து கல்வி நிதிஉதவியை அளித்து வருகிறது. இந்தாண்டு, பீகாரின் பாட்னா மாவட்டம் கோன்புரா கிராமத்தைச் சேர்ந்த பிரேம் குமார் என்பவர் அந்த 6 பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தினக்கூலி தொழிலாளியின் மகனான இவர் உலகின் தலை சிறந்த நிறுவனத்தில் Mechanical Engineering and International Relations என்ற பாடநெறியில் இளநிலை படிப்பை மேற்கொள்ள உள்ளார்.
குமாரின் இந்த வாய்ப்பை மகிழ்ச்சியுடன் பதிவிட்ட Lafayette College-ன் தலைமை அதிகாரி, " வாழ்த்துகள்! சமூகங்களில் பின்தங்கி இருக்கும் மக்களுக்கு சேவை செய்வதற்கான உங்கள் அர்ப்பணிப்பு, தீரம்,உறுதி ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டோம்." குமாரின் தனித்துவனமான/ விதிவிலக்கான சாதனைகள் கோன்புரா கிராம மக்களை ஊக்கப்படுத்தும். பெருமைப்படுத்தும்" என்று தெரிவித்தார்.
தனது மகிழ்ச்சியை பதிவிட்ட பிரேம் குமார், "குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி என்ற முறையில் மகிழ்ச்சிக் கொள்கிறேன். எனது பெற்றோர் பள்ளிகளுக்கு செல்லாதவர்கள். மேலை நாடுகளில் படிப்பதற்கான வாய்ப்பை நினைத்து மகிழ்கிறேன். இந்த வேளையில் Dexterity Global organisation என்ற நிறுவனத்துக்கு மகிழ்ச்சியைத் தெரிவித்து கொள்கிறேன். இவர்கள், பீகாரின் மகாதலித் பிரிவினருக்கு எண்ணற்ற பணிகளை செய்து வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: JEE Main 2022 Results: ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு..
உலகின் சிக்கலான/பிரதான சவால்களை தீர்க்கும் திறன் கொண்ட மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 2.5 கோடி மதிப்பிலான இந்த உதவித் தொகையில், மாணவர்களின் சேர்க்கை, கற்பிப்பு கட்டணம், தங்குமிடம், சுகாதார காப்பீடு, புத்தகங்கள், பயணச் சலுகை என அனைத்தும் வழங்கப்படுகிறிது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.