தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர் / ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு 30.09.2022 வரையிலும், பள்ளி மேற்படிப்பு (ம) தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு 31.10.2022 வரையிலும் இந்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை ஆன்லைன் இணையதளத்தில் (NSP)விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித்தொகை இந்திய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தால்' நேரடி பணப்பரிமாற்றம் மூலம் மாணவ மாணவியர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் (NSP) ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் (Nodal officer) ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையதளத்தில் சரிபார்க்க இயலும்.
புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய UDISE/AISHE/NCVT குறியீட்டு எண்ணை மாணவ/மாணவியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். திட்ட வழிகாட்டி முறைகள், இலக்கீடு, தகுதிகள், விதிமுறைகள் (ம) நிபந்தனைகள் , கல்வி நிலையங்களுக்காக அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகள் (FAQ). இணையம் செயல்படும் முறை (ம) 202- 2023 ஆம் ஆண்டில் இணையத்தில் ஏற்படுத்தப்பட்ட புதிய வசதிகள் ஆகியவைகள் மேற்காணும் இணையத்தளத்தில் தரப்பட்டுள்ளது. பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியான படிப்புகளின் விவரங்களை https://www.minorityaffairs.gov.in/ இணையத்தளத்தில் காணலாம்.
ALSO READ | என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது? எதிர்பார்ப்பில் மாணவர்கள்
தகுதியுள்ள அனைத்து கல்வி நிலையங்களும் இக்கல்வி உதவித்தொகை திட்டத்தில் பங்கு பெற கல்வி நிலையங்களின் ஒருங்கிணைப்பு அலுவலர் மற்றும் கல்வி நிலையத்தலைவர் ஆதார் விவரங்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் சரிபார்க்கப்படவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எண்.32, சிங்கார வேலர் மாளிகை, இரண்டாவது தளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். சிறுபான்மையின மாணவ/மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகையினை பெற உரிய காலத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central government, Chennai, Education