Military Nursing Service BSc Nursing Course: ராணுவ செவிலியர் மருத்துவக் கல்லூரியின் 2022 பிஎஸ்சி செவிலியர் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் கொண்ட
பெண் விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10, +2 பாடத் திட்ட முறையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும், அல்லது ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களைக் கொண்ட சமமான கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேசிய தேர்வு முகமை நடத்தும் 2022 நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும்.
யார் விண்ணப்பிக்கலாம்: திருமணமாகாத (அ) ஆதரவற்ற விதவை (அ) விவகாரத்து செய்தவர்/ சட்டரீதியாக பிரிந்து வாழும் பெண்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
முக்கியமான நாட்கள்:
ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை தொடங்கிய நாள் : 2022, மே மாதம் 11
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கூறிய கடைசி நாள் : 2022, மே மாதம் 31ம் தேதி வரை.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : பின்னர் அறிவிக்கப்படும்.
தெரிவு செய்யப்படும் முறை: கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கான உத்தேசப் பட்டியல் வெளியிடப்படும்.எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நேர்முகத் தேர்வின் போது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவர்கள் உடல் தகுதி தேர்வு, மற்றும் மருத்துவ தகுதி தேர்வுகளில் (Pyschological Assesment Test)
தகுதி பெற வேண்டும்.
வயது வரம்பு: 1997 அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகும், 2005 செப்டமபர் 30ம் தேதிக்கு முன்னதாகவும் பிறந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
சேர்க்கை இடங்கள்: 220
CON, AFMC Pune: 40
CON, CH (EC) Kolkata: 30
CON, INHS Asvini: 40
CON, AH (R&R) New Delhi: 30
CON, CH (CC) Lucknow: 40
CON, CH (AF) Bangalore: 40
மொத்தம்: 220
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.200 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பதாரர்கள் https://joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
AIIMS: பி.எஸ்சி நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி
புகைப்படம், கையொப்பம், கல்வித் தகதி, சாதி விபரங்கள் தொடர்பான ஆவணங்கள் இணையவழி விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். போதிய விபரங்கள் இல்லாத விண்ணப்பங்கள் உரிய நடைமுறைகளுக்கு பிறகு நிராகரிக்கப்படும்.
அறிவிக்கை:
Joint Military Nursing Service BSc (Nursing) Course - 2022
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.