12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, திருமணம் முடியாத ஆண்கள் அக்னிபத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய விமானப்படை படை தெரிவித்துள்ளது.
முக்கியமான நாட்கள்:
அறிவிக்கை: AGNIVEERVAYU INTAKE 01/2022
ஜூன் 24ம் தேதியில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும். வினைப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் ஜுலை 5 ஆகும்.
கல்விக்கான தகுதிகள்:
1. பொது கல்வித் தகுதி அதாவது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்;
2. இடைநிலை நிலை தேர்வு முறையில் (10+2) சான்றிதழ் பெற்றவர்கள்
(அல்லது)
3 ஆண்டுகள் பொறியியல் பட்டயம் சான்றிதழ் (பட்டயப் படிப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக கற்காதவர்கள், 10ம் வகுப்பு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்)
(அல்லது)
2 ஆண்டுகள் தொழில்நுட்ப பாடநெறியில் தேர்ச்சி பெற்றவர்கள் ( தொழிற்சார் கல்வி இல்லாத பாடநெறியில் இருந்து கணிதம், ஆங்கிலம், இயற்பியல் ஆகியவற்றில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்)
வயதுக்கான தகுதி: 1999 டிசம்பர் 29ம் தேதிக்கு முன்பு பிறந்தவர்களும், 2005 ஜூன் 29க்கு பின்பு பிறந்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. எவ்வாறாயினும், தேர்வு முறைகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்களின் வயது உச்சவரம்பு 23க்குள் இருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு (சிபிஎஸ்இ பாடத்திட்டம்), சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு, தழுவல் இயல்பு தேர்வு I, தழுவல் இயல்பு தேர்வு II, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் சேர்க்கை முறை நடைபெறும்.
மாதிரி வினாத்தாள், தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு முறை, விண்ணப்ப செயல்முறை தொடர்பான அனைத்து விபரங்களும் https://agnipathvayu.cdac.in/AV/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.
அக்னிபுத் திட்டத்தின் கீழ், வருடத்திற்கு 30 நாட்கள் விடுப்பு மற்றும் மருத்துவ அதிகாரியின் பரிந்துரைப்படி மருத்துவ விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.18 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் பெற்றோரின் அனுமதி கடிதம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க:
ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான அனுமதி நுழைவுச் சீட்டு வெளியானது
நான்கு ஆண்டுகள் பணியை நிறைவு செய்யும் அக்னிவீரர்கள் அனைவரும் கட்டாயம் சமூகத்திற்கு திரும்ப வேண்டும். எவ்வாறாயினும், தேவைக்கேற்ப, ஆர்வமுள்ள அக்னிவீரர்கள் இந்திய விமானப் படையில் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agnipath