கடந்த 5 ஆண்டுகளாக முதுகலை படிப்பில் எம்எஸ்சி பிரிவில் அதிக மாணவர்கள் இணைந்துள்ளதாக அகில இந்திய உயர்கல்வி ஆய்வு அறிக்கை (AISHE 2020-21 Report) தெரிவித்துள்ளது.
2020-21 கல்வியாண்டில் இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளில் 4.17 கோடி மாணவர்கள் சேர்ந்ததாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இளநிலை படிப்புகளைப் பொறுத்தவரையில், கலை, அறிவியல், வணிகவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் (B.Tech.-Bachelor of Technology and B.E.-Bachelor of Engineering), இளங்கலை கல்வியியல் (B.Ed.-Bachelor of Education), கணினி சார்ந்த இளங்கலை படிப்புகள் (Bachelor of Computer Application), இளங்கலை வணிக மேலாண்மை ( BBA), இளங்கலை சட்டப்படிப்பு (L.L.B.-Bachelor of Law), இளநிலை மருந்தியல் படிப்புகள் (B. Pharma) ஆகிய பிரிவுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
பி.ஏ (Bachelor of Arts) பாடப் பிரிவில், கடந்த 2016-17 ஆம் ஆண்டு 80 லட்சம் (8071804) மாணவர்கள் இருந்த நிலையில், தற்போது 85 லட்சமாக (8535174) அதிகரித்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 6 விகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது
அதேபோன்று, கடந்த 5 ஆண்டுகளாக, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பாடப்பிரிவில் மட்டும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. உதாரணமாக, 2016-17ம் ஆண்டில், B.E/B.Tech மாணவர் சேர்க்கை 40 லட்சத்துக்கு மேலாக (4085321) இருந்த நிலையில், 2021ல் 36.6 லட்சமாக சரிந்துள்ளது. தோராயமாக, 10.6% வீழ்ச்சியாகும்.
அதேபோன்று, 2016 ஆண்டுடன் ஒப்பிடுகையில், இளங்கலை சட்டப்படிப்பு (L.L.B.-Bachelor of Law) பிரிவில் மாணவர் சேர்க்கை விதிகள் 99.4 விகிதமாகவும், இளங்கலை கல்வியியல் துறையில் 73 விகிதமாகவும், இளநிலை செவிலியர் துறையில் 55 விகிதமாகவும், இளங்கலை வணிக மேலாண்மை பிரிவில் 52 விகிதமாகவும் வளர்ச்சி அடைந்துள்ளன.
முதுகலை கல்வி: முதுநிலை படிப்பை பொறுத்த வரையில், எம்எஸ்சி பிரிவில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. உதாரணமாக, 2016ல் மாணவர் சேர்க்கை 5.6 லட்சமாக இருந்த நிலையில், 2021ல் 7.6 லட்சமாக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 35 விகித வளர்ச்சியாகவும். அதைத் தொடர்ந்து எம்ஏ பிரிவில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 17% வளர்ச்சி அடைந்துள்ளது.
இதையும் வாசிக்க: நாட்டின் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை முதன்முறையாக 4 கோடியைக் கடந்தது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Higher education