முகப்பு /செய்தி /கல்வி / நாட்டின் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை முதன்முறையாக 4 கோடியைக் கடந்தது

நாட்டின் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை முதன்முறையாக 4 கோடியைக் கடந்தது

காட்சிப் படம்

காட்சிப் படம்

மேலும், நாட்டின் உயர்கல்வி பாலின சமநிலை குறியீடு 1.5 ஆக  அதிகரித்துள்ளது. அதாவது, 100 ஆண்களுக்கு 105 பெண்கள் உயர்கல்வி பெற்று வருகின்றனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

முதன்முறையாக, நாட்டின் மொத்த உயர்க்கல்வி மாணவர் சேர்க்கை 4 கோடியைக் கடந்தது. முன்னதாக, 2020-21 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி அறிக்கையை (AISHE Report) மத்தியக் கல்வி அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில், நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களின் சமீபத்திய போக்குகள் குறித்தும், உயர்கல்வி அணுகல் குறித்தும் பல்வேறு தகவல்கள்  இடம்பெற்றுள்ளன.

மாணவர் சேர்க்கை:  2020-21 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை (Total Enrolment in Higher Education) 4.13 கோடியாக உள்ளது.  கடந்த 2019-20 ஆம் ஆண்டு 3.85 கோடியாக இருந்த நிலையில், தற்போது 28.80 லட்சம் அதிகரித்துள்ளது. அதாவது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.4 விகிதம்  வளர்ச்சி அடைந்துள்ளது.    2014-15-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்த மாணவர் சேர்க்கை வளர்ச்சி 20.9% ஆகும்.

மொத்த மாணவர் எண்ணிகையில், பட்டியல் வகுப்பினரில் 14% பேரும், பழங்குடியினரில் 5.8% பேரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 35.8% பேரும், இதர பொது வகுப்பினரின் இருந்து 44.2% பேரும் உள்ளனர்.

கடந்த 2019-20 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது பட்டியல் பிரிவு மாணவர் சேர்க்கை 4.2% ஆக வளர்ச்சி அடைந்துள்ளது. 2014-15-ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 27.96% ஆக அதிகரித்துள்ளது.

அதேபோன்று பழங்குடியினர் வகுப்பினரைப் பொறுத்த வரையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய மாணவர் சேர்க்கை 11.9% ஆக அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த எண்ணிக்கை 47% ஆகும்.

பாலினம்:  பாலின அடிப்படையில் பார்த்தால், உயர்கல்வி பெறுவோர்களில் 51.3% பேர் (2.12 கோடி) ஆண்களாக உள்ளனர். 48.7% பேர் (2.01 கோடி) பெண்களாக உள்ளனர்.

மேலும், நாட்டின் உயர்கல்வி பாலின சமநிலை குறியீடு (Gender Parity Index) 1.5 ஆக  அதிகரித்துள்ளது. அதாவது, 100 ஆண்களுக்கு 105 பெண்கள் உயர்கல்வி பெற்று வருகின்றனர். பட்டியல் வகுப்பு பிரிவினரில் இந்த எண்ணிக்கை 107 ஆகவும், பழங்குடியினரில் இந்த எண்ணிக்கை 102 ஆகவும் உள்ளது.   உயர் கல்வித்துறையை அணுகுவதில் ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றிருக்கின்றனர்.

கல்வி சேர்க்கை விகிதம் (Gross Enrollment Ration):  

ஒட்டுமொத்த உயர் கல்வி சேர்க்கை விகிதம், 2020-21 ஆம் ஆண்டில் 27.3%ஆக உள்ளது. அதாவது,  உயர்கல்வி  சேரக்கூடிய 18-23  வயது வரம்புக்குட்ப்பட்ட  100 இளைஞர்களில், 27 பேர் மட்டுமே உயர்கல்வி சேர்க்கை பெற்று வருகின்றனர். இந்த விகிதம், கடந்த 2019-20 ஆம் ஆண்டில் 25.6%ஆக இருந்தது. பட்டியல் வகுப்பினரில் இந்த விகிதம் 23.1 ஆகவும், பட்டியல் பழங்குடியினரில் இந்த எண்ணிக்கை 18.9 ஆகவும் உள்ளது. 

 அதேபோன்று, மொத்த மாணவர் சேர்க்கையில் இளங்கலை படிப்பில் 78.09% பேரும், முதுகலை படிப்புகளில் 11.5% பேரும் சேர்ந்துள்ளனர். இளநிலை படிப்புகளில் 1.4 கோடி பேர் கலை சார்ந்த படிப்புகளிலும், 48 லட்சம் பேர் அறிவியல் சார்ந்த படிப்புகளிலும், 43 லட்சம் பேர் வணிகம் சார்ந்த படிப்புகளிலும், 36 லட்சம் பேர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் இணைந்துள்ளனர்.

இதையும் வாசிக்க:  75வது சுதந்திர தின அமுத பெருவிழா : கல்வியில் இதுவரை கடந்து வந்த பாதை என்ன?

First published:

Tags: Education, Higher education