Home /News /education /

அயல்நாடுகளில் கலப்பு கற்றல்முறையை பெரிதும் விரும்பும் இந்திய மாணவர்கள்: சர்வே சொல்வதென்ன?

அயல்நாடுகளில் கலப்பு கற்றல்முறையை பெரிதும் விரும்பும் இந்திய மாணவர்கள்: சர்வே சொல்வதென்ன?

காட்சிப் படம்

காட்சிப் படம்

இளநிலை படிப்புகளுக்கு மிகவும் உகந்த நாடாக ஆஸ்திரேலிய வளர்ந்து வருகிறது. ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 32 சதவீதம் பேர் ஆஸ்திரலேய நாட்டை உகந்ததாக தெரிவித்துள்ளது.

  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |
    அயல்நாடுகளில் இளநிலை படிக்க விரும்பும் இந்திய மாணவர்களில் 70%  பேர் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் உள்ளடக்கிய கலப்பு கற்றல்முறையை பெரிதும் விரும்புவதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது.

    அயல்நாடுகளில் படிப்பை மேற்கொள்ளும் இந்திய மாணவர்களை மையப்படுத்தி the Worldgrad என்ற கல்வி சேவை நிறுவனம், "WorldGrad Third Study Abroad Survey" எனும் அறிக்கையை வெளியிட்டது.

    அயல்நாடு செல்ல விரும்பும் 965 மாணவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது . கற்றல் செலவீனங்கள், அணுகல், உயர்கல்வி, பணி வாய்ப்பு உள்ளிட்டவைகளை இந்த ஆய்வு மதிப்பீடு செய்தது.

    அயல்நாடுகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர விரும்பும், 80% சதவீதத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் உள்ளடக்கிய கலப்பு கற்றல்முறையை பெரிதும் விரும்புவதாக தெரிவித்துள்ளனர். முதுநிலை மாணவர்களில் இந்த எண்ணிக்கை 75%க்கும் அதிகமாக உள்ளது.

    இதர முக்கிய சிறப்பம்சங்கள்:

    இளநிலை படிப்புகளுக்கு மிகவும் உகந்த நாடாக ஆஸ்திரேலிய வளர்ந்து வருகிறது. ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 32 சதவீதம் பேர் ஆஸ்திரலேய நாட்டை உகந்ததாக தெரிவித்துள்ளது. அமெரிக்க, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை முறையே  23%, 21%,  16% மாணவர்கள் உகந்ததாக தெரிவித்துள்ளனர்.  பணி வாய்ப்பு, கற்றல் செலவீனங்கள் உள்ளிட்டவைகள் இதற்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

    முதுகலை மாணவர்களிடையே (33%) மிகவும் உகந்த நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில்  இங்கிலாந்து, கனடா நாடுகளில் முதுநிலை படிப்புகளுக்கான கற்றல் செலவீனங்கள் குறைவாக உள்ளன. இருப்பினும், சர்வதேச நிறுவனங்களில் பணிவாய்ப்பு, அதிக சம்பளம் ஆகியவற்றைன் அடிப்படையில் அமெரிக்க முன்னிலையில் உள்ளது.

    முதுநிலை படிப்புகளுக்கு அயல்நாடு செல்ல விரும்பும், 75% பேர்  தங்கள் முதல் ஆண்டின் ஒரு பகுதியை குறைந்த செலவில் ஆன்லைனில் மேற்கொள்ள வேண்டும் என்று கருதுகின்றனர். இந்த எண்ணிக்கை, அமெரிக்காவில் படிக்க விரும்புவோரில் (81%) அதிகம்.

    இதையும் வாசிக்க: சென்னை ஐஐடியில் சேர விருப்பமா? askiitm இணையதளம் உங்களுக்குத் தான்

    இளநிலை மாணவர்களைப் பொறுத்த வரையில், அடுத்த கல்வியாண்டில் கல்வியை  தொடர இருக்கும் மாணவர்களைக் காட்டிலும், அடுத்த 3-12 மாதங்களுக்குள் கல்வியை தொடர இருக்கும் மாணவர்கள் அதிகமானோர் ஆன்லைன் படிப்பை அதிகம் எதிர்பார்ப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது.   
    Published by:Salanraj R
    First published:

    அடுத்த செய்தி