NIRF Ranking 2022: இந்திய உயர்கல்வி தரவரிசை பட்டியல் 2022-ல் ஒட்டுமொத்த பிரிவில்
சென்னை ஐஐடி தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடம் பெற்றுள்ளது.
நாட்டில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்வி, பல்கலைக்கழகம், மருத்துவத் துறை, கட்டடக் கலை, பல் மருத்துவம், அடல் கண்டுபிடிப்பு என 11 பிரிவுகளின் கீழ் 2022 தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்த ஆண்டு தரவரிசைக்கு, மொத்தம் 4,030 நிறுவனங்கள் விண்ணப்பித்தன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 259 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இந்த 4030 தனித்துவ நிறுவனங்களிடம் இருந்து பொறியியல், மருத்துவம் என பல்வேறு பிரிவுகள் கீழ் 7254 விண்ணப்பங்கள் தரவரிசைக்குப் பெறப்பட்டன.
முடிவுகள்:
ஒட்டுமொத்த பிரிவிலும் பொறியியலிலும் சென்னை ஐஐடி தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடம் பெற்றுள்ளது.
ஒட்டுமொத்த பிரிவில் முதலிடம் வந்த முதல் 10 நிறுவனங்கள்
சென்னை ஐஐடி
ஐஐஎஸ்சி பெங்களூர்,
ஐஐடி பெங்களூர்
ஐஐடி டெல்லி
ஐஐடி கான்பூர்
ஐஐடி கோரக்பூர்
ஐஐடி ரூர்கே
ஐஐடி கவுகாத்தி
எய்ம்ஸ் புதுடெல்லி
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
பொறியியல் பிரிவு:
சென்னை ஐஐடி
ஐஐடி டெல்லி
ஐஐடி மும்பை
ஐஐடி கான்பூர்
ஐஐடி காரக்பூர்
ஐஐடி ரூர்கே
ஐஐடி கவுகாத்தி
என்ஐடி திருச்சி
ஐஐடி ஹைதராபாத்
என்ஐடி கர்நாடகா
கல்லூரிகள் பிரிவு:
மிராண்டா ஹவுஸ்
இந்துக் கல்லூரி
சென்னை மாநிலக் கல்லூரி (Presidency College) சென்னை
இலயோலாக் கல்லூரி, சென்னை
லேடி ஸ்ரீ ராம் கல்லூரி
பி. எஸ். ஜி. ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்பத்தூர்
ஆத்ம ராம் சனாதன் தர்மம் கல்லூரி
செயின்ட் சேவியர் கல்லூரி, கொல்கத்தா
ராமகிருஷ்ணா மிஷன், ஹவுரா
கிரோரி மால் கல்லூரி, புது தில்லி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.