முகப்பு /செய்தி /கல்வி / தொடரும் மருத்துவ மாணவர்கள் தற்கொலை - காரணங்களும்,தீர்வுகளும்

தொடரும் மருத்துவ மாணவர்கள் தற்கொலை - காரணங்களும்,தீர்வுகளும்

காட்சிப் படம்

காட்சிப் படம்

தற்கொலை போன்ற எதிர்மறை எண்ணங்களில் இருந்து மாணவர்கள் விடுபடுவதற்கு அவசர உதவி எண் 044-2535 8756 அறிவிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai |

தமிழகத்தில் நீட் தேர்வில் வெற்றிவாய்ப்பை இழந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட காலம் போய், தற்போது மருத்துவப் படிப்பில் சேர்ந்த பின்பும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சோக நிலை தொடர்ந்து வருகிறது.

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை, கோவை, திருச்சி மற்றும் சென்னையில் முதுநிலை மருத்துவம் படித்துவந்த மாணவர்கள் தற்கொலை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் குஜராத் மாணவர் தற்கொலை என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

மாணவர்களின் தற்கொலைக்கான காரணங்களை விவரிக்கும் மருத்துவர் அமலோற்பவநாதன், வேறு மாநிலத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு புதிய சூழலில் பல பிரச்னைகள் இருப்பதாகவும், மேலும் முதுநிலை மாணவர்களுக்கு 24 மணிநேர பணி சுமை இருப்பதாகவும் கூறுகிறார். இதைத் தவிர்க்க கல்லூரி அளவில் மனநலத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்குகிறார்.

அதிகரிக்கும் மருத்துவ மாணவர்கள் தற்கொலை குறித்து விளக்கமளித்த கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை இயக்குநர் மற்றும் மாநில மனநல திட்ட ஒருங்கிணைப்பாளர் பூர்ண சந்திரிகா, எம்.பி.பி.எஸ். படிக்கும் போதே முதுநிலை படிப்புக்கான தனியார் பயிற்சி ஆகியவற்றில் சேர்த்து மாணவர்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்க வேண்டாம் என பெற்றோர்களை கேட்டுக்கொண்டார்.

இதையும் வாசிக்க: நீட் சேர்க்கை முறை குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்

மாணவர்கள் மனநிலையை திடமாக வைத்துக்கொள்ளச் செய்ய மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவின் அடிப்படையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறும் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு தொடர் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்கொலை போன்ற எதிர்மறை எண்ணங்களில் இருந்து மாணவர்கள் விடுபடுவதற்கு அவசர உதவி எண் 044-2535 8756 அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தேரணிராஜன் தெரிவித்தார்.

First published:

Tags: MBBS, Neet, Sucide