ஹோம் /நியூஸ் /கல்வி /

மாணவர்களுக்கு வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உடனடியாக வழங்க அரசு உத்தரவு

மாணவர்களுக்கு வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உடனடியாக வழங்க அரசு உத்தரவு

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தாமதமின்றி வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உடனடியாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பள்ளி, கல்லூரிகளுக்கான சேர்க்கை நடைபெற்றுவருகிறது. எனவே, பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கையின் போது மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ், வருமான வரிச் சான்றிதழ் போன்றவை தேவைப்படுகிறது. இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து, வருமானச்சான்றிதழ் / சாதிச் சான்றிதழ் கோரி பெறப்படும் மனுக்கள் மீது எவ்விதக் கால தாமதமின்றி உடனடியாகப் பரிசீலித்து, அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்க வட்டாட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Also read: தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆன்லைன் கல்வியில் அசத்தும் அங்கன்வாடி பள்ளி

  தற்போது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டு இருப்பதால் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்து, மாணவர்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  மேலும் அனைத்து இ-சேவை மையங்களிலும் மாணவர்கள் சான்றுகளைக் கூட்ட நெரிசல் இன்றிப் பெற்றுச் செல்ல ஏதுவாகக் குறிப்பிட்ட நாட்களை அதற்கென ஒதுக்கி, எவ்வித இடையூறு இன்றிச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.

  சான்றுகளை வழங்குவதில் தேவையற்ற கால தாமதத்தினைத் தவிர்த்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தவறாது சான்றுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், தேவையின்றி மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: College, School