முகப்பு /செய்தி /கல்வி / இந்த 4 மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

இந்த 4 மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த 28-ம் தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடைபெற்றது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு வரும் சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த 28-ம் தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றதால் தமிழக அரசு கோலகலமாக தொடக்க போட்டியை நிகழ்த்தியது.

Also Read : கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. ரகசிய வாக்குமூலம் அளித்த மாணவிகள் குறித்து சிறுமியின் தாய் சந்தேகம்

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரை பிரதமர் நரேந்திர மோடி சென்னை நேரு அரங்கில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர், அமைச்சர், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கடந்த ஜூலை 28 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட் 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஈடுசெய்யும் வகையில் வரும் சனிக்கிழமை ( 27-ம் தேதி ) வேலைநாளாக இருக்கும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

First published:

Tags: Education, School