சர்ச்சையைக் கிளப்பிய 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்விகள்..!

சர்ச்சையைக் கிளப்பிய 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்விகள்..!
சர்ச்சையான பொதுத்தேர்வுக் கேள்வி
  • Share this:
மணிப்பூரில், பாஜகவின் சின்னத்தைக் குறித்தும், நேருவின் எதிர்மறை செயல்பாடுகள் என்றும் கேட்கப்பட்ட பொதுத்தேர்வு கேள்விகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

மணிப்பூர் மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் பொலிட்டிக்கல் சயின்ஸ் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 32-வது எண் கேள்வியில், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னத்தை வரையுமாறு கேட்கப்பட்டுள்ளது. தேசிய கட்டமைப்பில் நேருவில் எதிர்மறை செயல்பாடுகள் நான்கைக் குறிப்பிடவும் என்றும் மற்றொரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநில பாஜக செயலாளர், சமகாலத்துக்கு தொடர்புடைய கேள்வி என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கே.ஹெச். ஜாய்கிஷன், ”மாணவர்களின் மனதில் குறிப்பிட்ட சார்பு நிலையை உருவாக்குவதற்கான முயற்சி” என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு தெரிவித்துள்ளார். மாநிலத்தின் கல்வி குழு தலைவரான எல்.மஹேந்திர சிங், “கேள்விகள் எதுவும் பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்படவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
First published: February 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading