ஹோம் /நியூஸ் /கல்வி /

பொதுத் தேர்வு எழுத உள்ள ப்ளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு - பள்ளிகல்வி துறை அறிவிப்பு

பொதுத் தேர்வு எழுத உள்ள ப்ளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு - பள்ளிகல்வி துறை அறிவிப்பு

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

பொதுத் தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி +2 மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வினை நடத்தி முடிக்கும் பணியில் பள்ளிக்கல்வி துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பொதுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டது. பொதுத் தேர்வு ஹால் டிக்கெட்டை மாணவர்கள் இணையத்தில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வி துறை தற்போது முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2022 - 23 ஆம் கல்வியாண்டில் நான் முதல்வன் திட்டம் சார்ந்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி கல்லூரி சேர்க்கைக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். பெரும்பாலான கல்லூரிகள், கல்லூரி சார்ந்த தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகவே மாணவர்களுக்கு வழங்குகின்றன. எனவே ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருத்தல் என்பது கட்டாயமான ஒன்று என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

12 ஆம் வகுப்பு பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரியினை வகுப்பு ஆசிரியர்கள் உதவியுடன் உருவாக்கிட தக்க நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மின்னஞ்சல் உருவாக்கிய பின் உள்நுழைவது எப்படி, பெறப்பட்ட மின்னஞ்சலை திறப்பது, படிப்பது குறித்த விளக்கத்தையும் மாணவர்களுக்கு அனைத்து ஆசிரியர்களும் கற்பித்தல் வேண்டும். மாணவர்கள் கடவு சொல்லை (password) எப்போதும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி துறை கேட்டு கொண்டுள்ளது.

மேலும் இச்செயல்பாட்டினை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் ஜனவரி 09 முதல் 12 வரை Hi-tech லேப் கணனிகளை பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: Public exams, School student