Home /News /education /

பள்ளி மாணவர்களுக்கு... அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு... அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

School Students : பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில், அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேட்டியளித்த  அளித்த அவர், பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அவ்வாறு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம் என்று கூறிய அமைச்சர், மேலும், பள்ளி வாகனங்களில் முன்புறம் பின்புறம் கேமராக்கள்  பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

பள்ளி திறந்தவுடன் முழுமையாக கண்காணிக்கப் படுவதோடு, மண்டல போக்குவரத்து அதிகாரி மூலம் சோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். பேருந்து பணிமனைகளில் பணிகளில் இருக்கும் பணியாளர்கள் தொடர் விடுப்பில் இருப்பதால்தான் பேருந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால், அதனை சரி செய்ய தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என்றும், ஆய்விற்கு பின் பணியாளர்கள் மீண்டும் பணிக்கு வர தொடங்கியுள்ளதாகவும், வரும் நாட்களில் முழுமையாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Must Read : பாஜக தலைவர்கள் கூட முதல்வர் ஸ்டாலினை பெருமையாக பேசுகின்றனர் - அமைச்சர் மெய்யநாதன்

மேலும், பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ- டிக்கெட் வழங்கும் முறை இந்தாண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தபின், G-pay, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
Published by:Suresh V
First published:

Tags: Bus, School students

அடுத்த செய்தி