11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தவேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு
11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தவேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு
கோப்பு படம்
11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் சிறுபான்மை பள்ளிகள் தவிர்த்து , மற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளில் வரும் 24-ஆம் தேதி முதல் 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது .
இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 11ஆம் வகுப்பு சேர்க்கையின்போது தமிழக அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு செயல்படும் பள்ளிகளில், சிறுபான்மை பள்ளிகள் தவிர்த்து மற்ற பள்ளிகளில் இட ஒதுக்கீடு முறையை இந்த ஆண்டும் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.
முதலில் பொதுபிரிவினர் தகுதிப் பட்டியலை தயாரித்து மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தவேண்டும் என்றும், இதே போன்று ஒவ்வொரு பிரிவிலும் , ஒவ்வொரு பாடப்பிரிவு சேர்க்கையிலும் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.