கர்நாடகாவில் தேசிய கல்வி கொள்கை அமல் - தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்

மாணவர்கள்

அறிவுத் தளத்தில் கர்நாடகா மிக வேகமாக முன்னேறும் என தர்மேந்திர பிரதான் நம்பிக்கை.

  • Share this:
    கர்நாடகாவில் நடப்பு ஆண்டில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.

    தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் நிகழ்ச்சி கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, கர்நாடக உயர் கல்வித் துறை அமைச்சர் அஷ்வத் நாராயண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி வாயிலாக இதில் பங்கேற்றார்.

    கர் நாடகாவில் நடப்பு கல்வி ஆண் டிலேயே தேசிய கல்விக் கொள்கை, அமல்படுத்தப் பட்டுள்ளது. அது தொடர்பான புதிய திட்டங் களை ம‌த்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தொடங்கி வைத்தார்.

    அப்போது, நாட்டில் முதல் மாநிலமாக க‌ர்நாடகாவில் 'தேசிய கல்வி கொள்கை 2020' நடப்பு 2021- 22 கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படுவதாக அறிவித்து, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார்.

    இது குறித்து தர்மேந்திர பிரதான் கூறுகையில், தேசிய கல்வி கொள்கையை நாட்டில் முதல் மாநிலமாக அமல்படுத்தியதற்காக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, கல்வி அமைச்சர் அஷ்வத் நாராயண் உள்ளிட்டோரை பாராட்டுகிறேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவால் நாட்டில் பிற மாநிலங் களுக்கு கர்நாடகா முன்மாதிரியாக விளங்குகிறது.

    தேசிய கல்வி கொள்கையின் காரணமாக, நாட்டின் முதல் மாநிலமாக கர்நாடகா மிளிரப் போகிறது. அறிவுத் தளத்தில் கர்நாடகா மிக வேகமாக முன்னேறும் என உறுதியாக நம்புகிறேன். கர்நாடக கல்வித் துறையில் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்து, பிற மாநிலங்களும் விரைவில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தும்” என்றார்.

    பசவராஜ் பொம்மை


    கர்நாடக உயர் கல்வித் துறை அமைச்சர் அஷ்வத் நாராயண், “தேசிய கல்விக் கொள்கையை கர்நாடகா முதல் மாநிலமாக அமல்படுத்தும் என முன்னாள் முதல் வர் எடியூரப்பா தொடர்ந்து கூறிவந்தார். அவரது வழிகாட்டுதலின் பேரில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றி, தற்போது தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி இருக்கிறோம்.

    Must Read : 25 விமான நிலையங்கள், 40 ரயில் நிலையங்கள்... பணமாக்குதல் திட்டம் : 6 லட்சம் கோடி ரூபாய் இலக்கு

    சிறந்த முறையில் திட்டமிட்டு, மாநிலம் முழுவதும் சீரான வேகத்தில் இதனை அமல்படுத்துகிறோம். இந்த கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள சவால்கள், சிரமங்கள் ஆகியவற்றை பரிசீலித்து உரிய முறையில் சரி செய்யப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மாவட்ட அளவிலும், பல்கலைக்கழகங்கள் அளவிலும் கருத்தரங்கம், விழிப்புணர்வு நிகழ்ச்சிக‌ளை நடத்தி மாணவர்கள், ஆசிரியர் களுக்கு விழிப்புணர்வு ஊட்டப் படும். பல்கலைக்கழகங்களில் தரமான ஆராய்ச்சி நடைமுறைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை விரைவில் தொடங் கப்படும்” என்று கூறினார்.
    Published by:Suresh V
    First published: