அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (Science, Technology, Engineering and Mathematics - STEM) ஆகிய பாடங்கள் கிராமப்புற பள்ளி மாணவர்களைச் சென்றடையும் வகையில் கோடைகாலப் பயிற்சி வகுப்பை சென்னை ஐஐடி நடத்துகிறது.
முன்னதாக, ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் நேற்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், " இந்த ஐந்து நாட்கள் மாணவர்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். இத்திட்டம் அரசுப் பள்ளி மாணவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும். மாணவர்களின் பெருமைக்குரிய இடமாக அரசுப் பள்ளிகள் மாற வேண்டும் என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார். வேலை தேடுவோருக்கு பதிலாக வேலைகளை உருவாக்குவோராக மாணவர்களை ஊக்குவிக்க இத்திட்டம் உதவும். ஸ்டெம் (STEM) கல்வி பெருமளவில் ‘கற்றல் விளைவுகளை’ மேம்படுத்தும் எனத் தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான அனுமதி நுழைவுச் சீட்டு வெளியானது
இத்திட்டத்தின் தொடக்கமாக முதலாவது பேட்ச்சில், கிராமப் புறங்களில் இருந்து அரசுப் பள்ளிகளில் படிக்கும் 100 மாணவர்கள் இருப்பிட கோடைகாலப் பயிற்சிக்காக (residential summer program) ஐஐடி மெட்ராஸ்-க்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். பொறியியல் துறையில் சுற்றுச்சூழல் மற்றும் மின்னணு அம்சங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் தொழில்நுட்ப வளர்ச்சி, பயன்பாட்டுக் கணிதம் (Applied Mathematics) உள்ளிட்ட அடிப்படை அறிவியல் தொடர்பான தலைப்புகள் இடம்பெறும். அரியலூர், கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இடம்பெற்றுள்ளதாக ஐஐடி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்க:
அடுத்த 6 மாதத்துக்குள் 42,000 பேருக்கு பணி - வேலைவாய்ப்பு குறித்து எஸ்எஸ்சி முக்கிய அறிவிப்பு
இந்த பயிற்சித் திட்டத்தை, எதிர்காலத்தில் ஆன்லைன் முறையில், இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கச் செய்ய ஐஐடி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IIT Chennai