ஹோம் /நியூஸ் /கல்வி /

சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக பேராசியர் காமகோடி நியமனம்!

சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக பேராசியர் காமகோடி நியமனம்!

காமகோடி

காமகோடி

மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு குழுவின் உறுப்பினராக இருந்து வரும் காமகோடி, அடுத்த மூன்றாண்டுகளுக்கு சென்னை ஐஐடியின் இயக்குனராக பதவி வகிப்பார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சென்னை ஐஐடி-யின் புதிய இயக்குநராக பேராசியர் காமகோடி நியமிக்கப்பட்டுள்ளார்.

  கடந்த 10 ஆண்டு காலம் சென்னை ஐஐடி இயக்குனராக பதவி வகித்து வந்த பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தியின் பதவிக்காலம் முடிவடைந்தது.

  இதையடுத்து, சென்னை ஐ ஐ டியின் கணிணி அறிவியல் துறை பேராசிரியர் காமகோடியை புதிய இயக்குனராக நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு குழுவின் உறுப்பினராக இருந்து வரும் காமகோடி, அடுத்த மூன்றாண்டுகளுக்கு சென்னை ஐஐடியின் இயக்குனராக பதவி வகிப்பார்.

  Also read... அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைப்பு - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

  Also read... முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு ஜனவரி 4-வது வாரத்தில் தொடங்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

  ஐஐடியின் இயக்குநராக பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி பதவி வகித்த காலத்தில் கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப்பின் மரணம், சாதி ரீதியான பாகுபாடு பார்க்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள் சென்னை ஐஐடி மீது முன்வைக்கப்பட்டன.

  அதே நேரம் கடந்த 3 ஆண்டுகளாக நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்ந்தெடுக்கப்பட்டது.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: IIT Chennai