கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் புதுவகையான பிரச்சனைகளை மாணவர்கள் சந்திக்கின்றனர் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.
முன்னதாக, சென்னை ஐஐடி-யில் உள்ளவிடுதி அறையில், ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தபுஷ்பக் ஸ்ரீசாய் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இவர் 3-வது ஆண்டு பி.டெக் படித்து வந்தார்.
இந்நிலையில், சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி நியூஸ்18 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த போட்டியில், மாணவர்கள் தற்கொலையை முற்றிலும் ஒழிக்க முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் முடிந்த அளவிற்கு மாணவர்கள் தற்கொலையை தடுக்க ஐஐடி நிர்வாகம் முழு வீச்சில் திட்டங்களை செயல்படுத்த தயாராகி வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும் , கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளும் அதன் பிறகு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அது மாணவர்களுக்கு புது வகை சவாலை ஏற்படுத்தியுள்ளது. புதுவகையான சூழலை எதிர்கொள்ள மாணவர்கள் தடுமாறுவதாக தெரிவித்தார்.
மேலும், ஐஐடி வளாகத்தில் ராகிங் மற்றும் மாணவர்களிடையே பாகுபாடு ஆகியவை 100% இல்லை. மாணவர்கள் பலருக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பல மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்துள்ளனர். மாணவர் தற்கொலைகளை தடுக்க பல்வேறு திட்டங்களை ஐஐடி நிர்வாகம் முன்னெடுக்க உள்ளது. அவற்றை அமல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai IIT