Home /News /education /

TEE தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்ட IGNOU - எப்படி டவுன்லோடு செய்வது?

TEE தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்ட IGNOU - எப்படி டவுன்லோடு செய்வது?

  ஹால் டிக்கெட்டை வெளியிட்ட IGNOU -

ஹால் டிக்கெட்டை வெளியிட்ட IGNOU -

முழுமையான TEE தேர்வு அட்டவணை அதிகாரப்பூர்வ வலைத்தளமான ignou.ac.inல் கிடைக்கிறது, மாணவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் பாட வாரியான தேர்வு தேதியை பார்க்கலாம்.

    இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (Indira Gandhi National Open University - IGNOU) அனைத்துப் படிப்புகளுக்கான வரவிருக்கும் ஜூன் டெர்ம்-என்ட் எக்ஸாமினேஷனுக்கான (June Term-end examination) ஹால் டிக்கெட்டை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் IGNOU ஜூன் 2022 Term End Examination-க்கான ஹால் டிக்கெட்டை அதிகாரப்பூர்வ இணையதளமான ignou.ac.in-லிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

    இந்த ஆண்டு இரண்டு ஷிப்டுகளாக தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் காலை அமர்வு தேர்வு காலை 10:00 மணிக்கு தொடங்கி மதியம் 1:00 மணிக்கு முடிவடையும். பிற்பகல் அமர்வு பிற்பகல் 2:00 மணிக்கு தொடங்கி மாலை 5:00 மணிக்கு முடிவடையும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    Term End Examination வரும் ஜூலை 22, 2022 முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் செப்டம்பர் 5, 2022 அன்று முடிவடையும். TEE ஹால் டிக்கெட் ஜூலை 19 அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் அதே தேதியில் வெளியிட்டுள்ளது. இதனிடையே தேர்வர்கள் தங்கள் TEE ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்யும் போது, அவர்களது ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.

    ஹால் டிக்கெட் தகவல்களில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் அதை சரிசெய்ய உடனே மாணவர்கள் அதிகாரிகளை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள். IGNOU TEE ஹால் டிக்கெட் 2022 ஜூன் செஷனில் மாணவர்களின் பெயர், பதிவு எண், கட்டுப்பாட்டு எண், தேர்வு மையக் குறியீடு, தேர்வு மைய முகவரி, பாடநெறி குறியீடு, தேர்வு தேதி, அமர்வு, அமர்வு நேரம்/காலம், தேர்வு தேதி வழிகாட்டுதல்கள் போன்ற பல முக்கிய விவரங்கள் இருக்கும். IGNOU Exam 2022 ஹால் டிக்கெட்டைப் டவுன்லோடு செய்யும் முன், ஹால் டிக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறது.

    ALSO READ | 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை... சென்னையில் ஜூலை 22-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

    முழுமையான TEE தேர்வு அட்டவணை அதிகாரப்பூர்வ வலைத்தளமான ignou.ac.inல் கிடைக்கிறது, மாணவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் பாட வாரியான தேர்வு தேதியை பார்க்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களின் IGNOU TEE ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

    * முதலில் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான ignou.ac.in-க்கு செல்லவும்

    * ஹோம்பேஜில் கொடுப்பட்டிருக்கும் Download TEE Hall Ticket June 2022 என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளவும்.

    * 9 அல்லது 10 டிஜிட் என்ரோல்மென்ட் நம்பர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட தேவையான சான்றுகளை என்டர் செய்யவும்.

    * பின் கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து உங்கள் programme-ஐ தேர்ந்தெடுத்து submit பட்டனை கிளிக் செய்யவும்.

    * IGNOU TEE ஹால் டிக்கெட் ஸ்கிரீனில் தெரியும்.

    * இறுதியாக தேர்வர்கள் தங்களின் TEE ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம். எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளலாம்.

    விண்ணப்பதாரர்கள் தங்கள் TEE ஹால் டிக்கெட்டை தேர்வு மையத்திற்கு கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் அட்மிட் கார்டு இல்லாமல் மாணவர்கள் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வர்கள் தேர்வு நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு மையத்தை அடைய அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வில் பங்கேற்க IGNOU அதிகாரிகள் வழங்கிய அனைத்து வழிமுறைகளையும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Education

    அடுத்த செய்தி