இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU) மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் கடைசி தேதி டிசம்பர் 31 என தெரிவித்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் தொலைதூரக் கல்வி முறையில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சான்றிதழ் படிப்புகள் மற்றும் செமஸ்டர் தேர்வு அடிப்படையிலான படிப்புகள் தவிர்த்து ஏனைய அனைத்துப் படிப்புகளுக்கும் ஜூலை 2020 பருவத்துக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே, மாணவர் சேர்க்கைக்கு பதிவு செய்வதற்கான கால அவகாசம் கடந்த டிசம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விரும்பிய படிப்புகளுக்கு பதிவு செய்ய ஆர்வமுள்ள நபர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ignou.ac.in -ஐ சரிபார்க்கலாம். இருப்பினும், சான்றிதழ் மற்றும் செமஸ்டர் அடிப்படையிலான திட்டங்களுக்கு இந்த நீட்டிப்பு பொருந்தாது என்றும் பல்கலைக்கழகம் கூறியது. இதில் MP, MPB, PGDFM, PGDHRM, PGDMM, PGDOM, PGDFMP, PGDIS, DBPOFA, BCA மற்றும் MCA ஆகிய படிப்புகள் அடங்கும். சான்றிதழ், பாடநெறிக்கான காலக்கெடு ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் நீட்டிக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, " சான்றிதழ் மற்றும் செமஸ்டர் அடிப்படையிலான திட்டங்களைத் தவிர்த்து, ஜூலை 2020 பருவத்திற்கான சேர்க்கைக்கு பதிவு செய்யும் கடைசி தேதி டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளது.
இக்னோ ஜூலை 2020 சேர்க்கைக்கு பதிவு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்: https://ignouadmission.samarth.edu.in/index.php/registration/user/register
இக்னோ மாணவர் சேர்க்கைக்கு பதிவு செய்யும் வழிமுறைகள் :
* ignou.ac.in என்ற இக்னோவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் உள்நுழையவும்.
* முகப்புப்பக்கத்தில் கிடைக்கும் “ரிஜிஸ்டர் ஆன்லைன்” விருப்பத்தின் கீழ் உள்ள “புதிய சேர்க்கை (Fresh Admission)” லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
* பிறகு "புதிய பதிவுக்காக இங்கே கிளிக் செய்க (Click here for New Registration)" என்று எழுதப்பட்ட பட்டனை கிளிக் செய்க வேண்டும்.
* “நேரடி இணைப்பு (Direct Link)” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் மேலே உள்ள மூன்று படிகளை நீங்கள் தவிர்க்கலாம்.
* பின்னர் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுத்து முழு பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் போன்ற விவரங்களை நிரப்பவும், பின்னர் பதிவு பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
* விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம், கையொப்பம், வயது சான்றின் நகல், கல்வி தகுதி மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
* விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் பயன்படுத்தி கட்டணம் செலுத்த வேண்டும்.
மூத்த குடிமக்களுக்கு 50% கட்டணச் சலுகை- ஏர் இந்தியா அறிவிப்பு
இதையடுத்து வலைத்தளத்தின் முகப்புப்பக்கத்தில் கிடைக்கும் விரும்பிய திட்டத்தின் பெயரைக் கிளிக் செய்வதன் மூலம் வழங்கப்படும் திட்டங்கள் குறித்த விவரங்களைக் பதிவு செய்பவர்கள் தெரிந்துகொள்ளலாம். தகுதி அளவுகோல்கள், பாடநெறி கட்டணம் மற்றும் கால அளவு தொடர்பான தகவல்கள் இதில் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.