இளங்கலை, டிப்ளமோ, மற்றும் எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்ப செயல்முறையை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
2022 ஜூலை பருவ சேர்க்கை:
விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் - 2022, ஜூலை 31 ஆகும். தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர்
https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தில் ஜுலை 31க்குள் விண்ணப்பிக்கலாம். திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கற்றல் (ODL ) ஆன்லைன் நிகழ்ச்சிகள் (OL ) மூலம் பாடத்திட்டங்கள் வழங்கப்படும்.
எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு கல்விக்கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும், ஒரு விண்ணப்பதாரர் கட்டண விலக்கு கோரி ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தால், அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
தகுதியான மாணவர்கள் சேர்க்கை உறுதிசெய்யப்பட்ட பிறகு
https://scholarships.gov.in/ என்ற இணையதளத்தில் இந்திய அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
தேவையான சான்றிதழ்கள்:
விண்ணப்பபதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, கல்வித் தகுதி சான்றிதழ், வயதுக்கான சான்றிதழ், பணி அனுபவ சான்றிதழ்(ஏதேனும் இருந்தால்), சாதி தான்றிதழ், வறுமை கோட்டு சான்றிதழ், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், கையெழுத்து நகல் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு,
இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்
முகப்பு பக்கத்தில்
Click Here For New Registration என்ற இணைப்பைக் கிளிக் செய்து பதிவெண் கடவுச்சொல்லை உருவாக்கி உள்ளே செல்லுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.