Home /News /education /

தகுதியான மாணவர்களை அடையாளம் காட்டுங்கள்...! ஆசிரியர்களுக்கு சூர்யா கோரிக்கை

தகுதியான மாணவர்களை அடையாளம் காட்டுங்கள்...! ஆசிரியர்களுக்கு சூர்யா கோரிக்கை

சூர்யா

சூர்யா

இதுவரை சுமார் 2500 மாணவர்கள் அகரம் விதைத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம் என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
    2019-ம் ஆண்டும் பிளஸ் டூ தேர்வு எழுதுகிற மாணவர்களில் தகுதியும், திறமையும் வாய்ந்த ஏழை மாணவர்களை அகரத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நடிகர் சூர்யா ஆசிரியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    அகரம் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு மூலம் ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற மாணவர்கள் கல்விக்காக நடிகர் சூர்யா உதவி செய்து வருகிறார். இந்நிலையில், அகரம் அமைப்புக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த மாணவர்களை அடையாளம் காட்டும்படி அவர் ஆசிரியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    “ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம். அரசுப்பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் உயர்கல்வி பெற அகரம் ஃபவுன்டேஷன் கடந்த பத்தாண்டுகளாக துணைபுரிகிறது. பெற்றோர்களை இழந்த, ஆதரவற்ற, வறுமை காரணமாக மேகொண்டு கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது.

    இதுவரை சுமார் 2500 மாணவர்கள் அகரம் விதைத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

    2019-ம் ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதுகிற மாணவர்களில் தகுதியும் திறமையும் வாய்ந்த ஏழை மாணவர்களை அகரத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.



    வறுமை மற்றும் குடும்பச் சூழல் காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் போகிற மாணவர்களை கீழ்க்காணும் அகரம் ஃபவுண்டேஷன் அலுவலக எண்ணிற்குத் தொடர்பு கொள்ள செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    ப்ளஸ் டூ மாணவர்களின் வகுப்பறை கரும்பலகையில் இந்த தொடர்பு எண்களை எழுதிப்போடும் படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி 80561 34333 / 98418 91000” என்று சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Also See..

    Published by:Sankar
    First published:

    Tags: Actor Surya

    அடுத்த செய்தி