Home /News /education /

ICSE X Results: இன்று மாலை 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் - ஐசிஎஸ்இ

ICSE X Results: இன்று மாலை 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் - ஐசிஎஸ்இ

காட்சிப் படம்

காட்சிப் படம்

செல்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்

    இன்று சரியாக மாலை 5 மணிக்கு 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை (ஐசிஎஸ்இ) தெரிவித்துள்ளது. மாணவர்கள் சிரமமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள  இணையதளம் வாயிலாகவும், செல்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் அரசு துறையும், அரசுசாராத் துறையும் பொதுக்கல்வியை வழங்கி வருகின்றன. அந்த வகையில், அரசு சாராத் துறையான  ஐசிஎஸ்இ, நாட்டின் தனியார் கல்வி பாடசாலைகளை கட்டுப்படுத்தி மதிப்பீடு செய்து வருகிறது.  இதன்கீழ், நூற்றுக்கணக்கான பாடசாலைகள் இணைந்துள்ளன.

    இந்த சபை, ஆண்டுதோறும் மேல்நிலை வகுப்புத் தேர்வுகளையும் (the Indian School Certificate (ISC -Class XII Examination), உயர்நிலை வகுப்புத் தேர்வுகளையும் (The Indian Certificate of Secondary Education (ICSE - Class X Examination) நடத்துகிறது.

    கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, 2020-21 கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக ஐசிஎஸ்இ  நடத்தியது.

    முதல் அமர்வில் 50% பாடத்திட்டங்களில் இருந்து கொள்குறிவகை வினா விடை (MCQ) மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர். அதற்கான தேர்வு முடிவுகள் முன்னரே அறிவிக்கப்பட்டது. இரண்டாவது அமர்வு எழுத்துத் தேர்வாக நடைபெற்றது. இதில், புறநிலை வகை வினாக்களும், அகநிலை வினாக்களும் இடம் பெற்றிருந்தன.

    மாணவர்கள், இரண்டு அமர்வுகளிலும் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், மாணவர்களின் செயல்பாடு உள் மதிப்பீடு (Internal Assesment) அடிப்படையிலும் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று ஐசிஎஸ்இ  தெரிவித்திருந்தது.

    இதையும் வாசிக்கபிளஸ் டு மாணவி மரணத்தில் பள்ளி நிர்வாகத்திற்கு தொடர்பிருந்தால் கடும் நடவடிக்கை- மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தகவல்

    தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது? 

    மாணவர்கள் சிரமமின்றி தேர்வு முடிவுகளை கீழ்கண்ட  இணையங்களில் பார்க்கலாம்.

    indiaresult.com

    examresult.net

    digilocker.gov.in

    Umang App

    கூடுதலாக, பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: 10th Exam

    அடுத்த செய்தி