• HOME
 • »
 • NEWS
 • »
 • education
 • »
 • தொடக்க பள்ளிகளை திறக்க கிரீன் சிக்னல்...

தொடக்க பள்ளிகளை திறக்க கிரீன் சிக்னல்...

பள்ளி மாணவிகள்

பள்ளி மாணவிகள்

40 கோடி மக்கள் எளிதில் தொற்று பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர்.

 • Share this:
  பள்ளிகளில் பணியாற்றும் உதவி பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓட்டுநர்கள் ஆகியோருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று கூறியுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) முதலில் எந்த வகுப்பைத் தொடங்கலாம் என்பதையும் தெரிவித்துள்ளது.

  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்க ஆயத்தமான நிலையில் கொரோனா 2ஆவது அலை நாடு முழுவதும் பரவியது. இதனால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதற்கிடையே கொரோனா 3ஆவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என தகவல்கள் வெளியாகின. ஆனால், மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என்பதற்கான எந்தவித சாத்தியக்கூறுகளும் இல்லை என மருத்துவ வல்லுநர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், பெரியவர்களை விட குழந்தைகள் திறம்பட கொரோனா வைரஸ் தொற்றுகளை கையாள முடியும் எனவும் ஆகவே, முதலில் தொடக்கப்பள்ளிகளை திறக்கலாம் எனவும் ஐ.சி.எம்.ஆர் கருதது தெரிவித்துள்ளது. இது குறித்து, ஐசிஎம்ஆர் இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா சுகாதார அமைச்சக கூட்டத்தில் பேசுகையில், “பெரியவர்களை விட குழந்தைகள் மிகவும் திறம்பட வைரஸ் தொற்றுகளை கையாள முடியும் என்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது.  4ஆவது தேசிய செரோ ஆய்வில், குழந்தைகளிடம் பெரியவர்களை போலவே ஆன்டிபாடிகள் அளவை உருவாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சூழலில், முதலில் தொடக்கப் பள்ளிகளை திறப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். பள்ளிகளில் பணியாற்றும் உதவி பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓட்டுநர்கள் ஆகியோருக்கும் தடுப்பூசி போட வேண்டும். சில ஐரோப்பிய நாடுகளில், துவக்கப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன” என்று கூறியுள்ளார்.

  நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியும் பரிசோதனை

  இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி, மக்கள் உடலில் உருவாகி உள்ளதா என்பதை அறிய, ‘செரோ டெஸ்ட்’ எனப்படும், நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியும் பரிசோதனையை இந்திய மருந்துவ ஆராய்ச்சி கவுன்சில் செய்து வருகிறது. அதன்படி, இதுவரை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 28 ஆயிரத்து 975 பொது மக்களிடமும், 7,252 சுகாதார பணியாளர்களிடமும் மூன்று கட்டங்களாக இந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஜூன் - ஜூலை மாதங்களில் 21 மாநிலங்களைச் சேர்ந்த 70 மாவட்டங்களில் நான்காவது கட்ட, ‘செரோ டெஸ்ட்’ மேற்கொள்ளப்பட்டது.

  இந்த பரிசோதனை குறித்து, ஐ.சி.எம்.ஆர்., வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் மக்கள் தொகையில், 6 வயதுக்கு மேற்பட்ட, மூன்றில் இரண்டு பங்கினர் அல்லது 68% பேருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி உள்ளது. மீதமுள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை. எனவே 40 கோடி மக்கள் எளிதில் தொற்று பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர். இந்த ஆய்வில் பங்கேற்ற 85 சதவீத சுகாதாரப் பணியாளர்களின் உடலில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. சுகாதாரப் பணியாளர்களில் 10-ல் ஒருவர் தடுப்பூசி போடாதவராக இருக்கின்றனர்.

  Must Read : 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

  குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அதிக பாதிக்காது 

  தேவையற்ற பயணங்கள், சமூக, ஆன்மிக, அரசியல் கூட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே பயணங்கள் மேற்கொள்ளலாம். குழந்தைகள் உடலில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே, கல்வி பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மூன்றில் இரண்டு பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதால், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதில் அலட்சியம் காட்ட கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: