• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் - மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயர் மாற்றம்

புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் - மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயர் மாற்றம்

மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

மத்திய அரசு மனிதவள மேம்பாட்டு அமைச்சத்தின் பெயர் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யவுள்ளது.

  • Share this:
    இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையைத் தயாரிப்பதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 2017ம் ஆண்டு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் முக்கியப் பரிதுரையின் அடிப்படையில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயர் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

    இதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கிவிட்டதாகவும், அறிவிப்பு பிறகு வெளியாகும் என்றும் அரசு தரப்பு தகவல் தெரிவிக்கிறது.

    Also read: EIA 2020 வரைவை 22 மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு மறுப்பு - உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

    1985ம் ஆண்டு ராஜீவ் காந்தி ஆட்சியின்போது கல்வி அமைச்சகம் எனும் பெயர் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதை தற்போது மீண்டும் முந்தைய பெயருக்கே மாற்றம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

    1986ம் ஆண்டு அமலாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை தற்போது புதிய கல்விக் கொள்கை (NEP) பதிலீடு செய்வதன் மூலம் கல்வித்துறையில் இப்படியான மாற்றங்கள் பலவற்றை மத்திய அரசு செய்யவுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: