திருச்சி கிராமாலயா தொண்டு நிறுவனம் மற்றும் கிவ் 2 ஏசியா நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனா தடுப்பு மருந்து உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் சுகாதார பொருட்களை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கினர். பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இவற்றைப் பெற்றுக் கொண்டு மருத்துவத்துறை அலுவலர்களிடம் வழங்கினர்.
இதன் பின்னர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வருகின்றன. இந்த ஆலோசனைகளின் அடிப்படையிலும் சி.பி.எஸ்.இ எவ்வாறு மதிப்பெண் வழங்க உள்ளார்கள் என்பதையும் ஆராய்ந்து அனைத்து தரப்பு மாணவர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் மதிப்பெண் வழங்கப்படும்.
Also Read : +2 மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படும்? சிபிஎஸ்இ விளக்கம்!
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணபித்துள்ள தனி தேர்வர்களையும் கவனத்தில் கொண்டுள்ளோம். அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதா? அல்லது அவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்துவதா? என்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
மேலும், தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் வருகின்றன. எந்த பள்ளிகளின் மீது புகார்கள் வருகிறதோ அவர்களை கண்டித்து வருகிறோம். அதையும் மீறி அதிக கட்டணம் வசூலித்தால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அடுத்தடுத்து அறிவிக்கப்படும் தளர்வுகளை வைத்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும். கடந்த ஆட்சியில் மாணவர்களுக்கோ வழங்கப்பட வேண்டிய 2 லட்சம் லேப்டாப்புகள் இன்னும் வழங்கப்படாமல் உள்ளன. அந்த மாணவர்களுக்கும் சேர்த்து தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி லேப் டாப்கள் வழங்கப்படும்.
கல்வி பெறும் உரிமை சட்டத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மீது கடந்த ஆட்சியில் பாகுபாடு காட்டப்பட்டு வந்தது. இனி அவ்வாறு அந்த மாணவர்களிடம் பாகுபாடு காட்டக் கூடாது. அந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தில் நிலுவைத்தொகை இருந்தால் அதை உடனடியாக விடுவிக்க வேண்டும். எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anbil Mahesh Poyyamozhi, DMK