TN HSE +2, SSLC result 2022: 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்கம் நாளை வெளியிட இருக்கிறது. மாணவர்கள் சிரமமின்றி தேர்வு முடிவுகளை இணைய தளங்கள் வாயிலாக காணலாம்.
நாளை (ஜூன்20 ), காலை 9.30 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். அடுத்த நிமிடமே மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
http://www.tnresults.nic.in/, http://www.dge1.tn.nic.in/, http://www.dge2.tn.nic.in/, https://www.dge.tn.gov.in/ ஆகிய இணைய தளங்கள் வாயிலாக சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம்.
அதேபோன்று, நண்பகல் 12 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதையும் வாசிக்க:
12ம் வகுப்புக்குப் பிறகு, என்ன படிக்கலாம்? மாணவர்களை ஈர்க்கும் துறைகள் யவை?
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
இதையும் வாசிக்க: 12ம் வகுப்பு பாடத்தில் இருந்து குஜராத் வன்முறை தொடர்பான பகுதிகள் நீக்கம்
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் இணையதளமான https://www.dge.tn.gov.in/ வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.