ஹோம் /நியூஸ் /கல்வி /

Tamil Nadu 12th Result 2021 | ப்ளஸ் 2 ரிசல்ட் எப்படி பார்ப்பது? எளிய வழி...

Tamil Nadu 12th Result 2021 | ப்ளஸ் 2 ரிசல்ட் எப்படி பார்ப்பது? எளிய வழி...

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

12ம் வகுப்பு இறுதி மதிப்பெண் கணக்கிடும் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு முடிவுகள் வெளியாகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் இன்று காலை 11மணிக்கு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.

  கொரோனா காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதன்படி 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 3 பாடங்களின் சராசரி அடிப்படையில் 50 மதிப்பெண்களும், 11ம் வகுப்பில் 20 விழுக்காடும், 12ம் வகுப்பில் செய்முறை மற்றும் அகமதிப்பீட்டில் 30 விழுக்காடு மதிப்பெண்களும் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து 12ம் வகுப்பு இறுதி மதிப்பெண் கணக்கிடும் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு முடிவுகள் வெளியாகிறது.

  தேர்வு முடிவுகள் அறிவிப்பு

  இதற்காக 4 இணையதளங்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

  www.tnresults.nic.in,

  www.dge1.tn.nic.in,

  dge.tn.gov.in,

  dge2.tn.nic.in-இல் அறியலாம்

  தேர்வு முடிவுகள்

  மாணவர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை குறிப்பிட்டு மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.

  ஜூலை 22-ம் தேதி முதல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கலாம்

  Published by:Ramprasath H
  First published:

  Tags: 12th Exam results, Exam, Exam results, Plus 2 Examination, Tamilnadu