Home /News /education /

ஆன்லைன் செமஸ்டர் தேர்வு எவ்வாறு நடைபெறும்? வழிமுறைகள் என்ன?

ஆன்லைன் செமஸ்டர் தேர்வு எவ்வாறு நடைபெறும்? வழிமுறைகள் என்ன?

மாணவர்கள் எழுதிய தேர்வுக்குரிய விடைத்தாள்களை ஒவ்வொரு பாடத்தேர்வும் முடிந்த 1 வார காலத்திற்குள் கூரியர் அல்லது தபால் வாயிலாக மாணவர்கள் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்-லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதனடிப்படையில்

    1. மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தேர்வுகளில் பங்கேற்பார்கள். தேர்வு துவங்கும் சமயத்தில் மாணவர்களின் வாட்ஸ் அப் எண், மின்னஞ்சல், கூகுள் மீட் , போன்றவற்றின் மூலம் வினாத்தாள்கள் அனுப்பப்படும்.

    2. இதனையடுத்து மாணவர்கள் A4 தாள்களில் விடைகளை எழுத வேண்டும்.

    3). செமஸ்டர் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.

    4. தேர்வு முடிந்த அடுத்த 1 மணி நேரத்தில் விடைத்தாள்களை மின்னஞ்சல், வாட்ஸ் அப் போன்றவற்றின் வாயிலாக கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    Also Read : தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் - தனியார் பள்ளிகள் கோரிக்கை

    5. இவற்றை தேர்வுக்குரிய பாடங்களுக்கான பேராசியர்கள் கண்காணித்து விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யச்சொல்லி பெறுவர்.

    6. தேர்வு முடிந்த பிறகு 1 மணி நேரத்தில் விடைத்தாள்களை மின்னஞ்சல், வாட்ஸ் அப் போன்றவற்றின் வாயிலாக கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    7. அதேபோன்று மாணவர்கள் எழுதிய தேர்வுக்குரிய விடைத்தாள்களை ஒவ்வொரு பாடத்தேர்வும் முடிந்த 1 வார காலத்திற்குள் கூரியர் அல்லது தபால் வாயிலாக மாணவர்கள் பயிலும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    8. அவ்வாறு அனுப்பத்தவறினால் விடைதாள்கள் மதிப்பீடு செய்யப்படாது.

    9. மேலும் மாணவர்கள் மின்னஞ்சல், வாட்ஸ் அப் வாயிலாக அனுப்பிய விடைத்தாள்களும், தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பப்பட்ட விடைத்தாள்களும் ஒன்றாக இருந்தால் மட்டுமே விடைதாள் மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.

    Must Read :  எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை: தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Anna University, Exam, Madras University

    அடுத்த செய்தி