• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • CBSE 12th Result: +2  மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படும்? சிபிஎஸ்இ விளக்கம்!

CBSE 12th Result: +2  மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படும்? சிபிஎஸ்இ விளக்கம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

10ம் வகுப்பு மதிப்பெண்ணில் இருந்து 30 சதவீதம், 11ம் வகுப்பு மதிப்பெண்ணில் இருந்து 30 சதவீதம் மற்றும் 12ம் வகுப்பில் பருவத் தேர்வுகள், பொதுத்தேர்வுக்கு முந்தைய தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்ணில் இருந்து 40 சதவீதம் ஆகியவற்றின் அடிப்படையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கணக்கிடப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

  • Share this:
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் கணக்கிடப்படும் என உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இதையெடுத்து மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படும் என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி வழக்கறிஞர் மம்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். தேர்வுகள் ரத்து செய்யப்பட்டபோதிலும்  மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படும் என இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படும் என உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் சிபிஎஸ்இ தரப்பில் ஆரஜாகி விளக்கமளித்தார்.  அப்போது அவர் , கடந்த 1929ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ செயல்பட்டு வருவதாகவும்  இதுபோன்ற நிகழ்வு இதற்கு முன்பு நிகழ்ந்தது இல்லை என்றும் தெரிவித்தார். வல்லுநர்கள் அடங்கிய குழு மூலம் இந்த முறையை சிபிஎஸ்இ உருவாக்கியுள்ளது.  அதன்படி 10,11 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படும்

  • 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் 5 பாடங்களில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்ற 3 பாடங்களின் மதிப்பெண்களில் இருந்து 30 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும்.

  • 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்ணில் இருந்து 30 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும்.

  • 12ஆம் வகுப்பு யூனிட் தேர்வுகள், பருவத் தேர்வுகள், பொதுத்தேர்வுக்கு முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 40% மதிப்பெண்கள் வழங்கப்படும்.


  • எழுத்து தேர்வு முடிவுகள் மட்டுமே 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் கணக்கிடப்படும். செய்முறை தேர்வுக்கான மதிப்பெண்கள்  சிபிஎஸ்இ இணையப்பக்கத்தில் பள்ளிகள் தாக்கல் செய்த மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்படும்


எடுத்துக்காட்டாக, வேதியியல் தேர்வில் 100 மதிப்பெண் உள்ளதென்றால் இதில் 70 சதவீதம் எழுத்து தேர்வு அடிப்படையிலும் 30 சதவீதம் செய்முறை தேர்வின் அடிப்படையிலும் வழங்கப்படும். எனவே, 10ம் வகுப்பு வேதியியல் தேர்வில் முழு மதிப்பெண் வழங்கிய  ஒரு மணவனின் எழுத்து தேர்வுக்கான மதிப்பெண்  70ல் முப்பது சதவீதமான 21 ஆகும், இதேபோல், அம்மாணவன் 11ம் வகுப்பு வேதியியல் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணிலும் 30 சதவீதம் கணக்கிடப்படும்.

மேலும் படிக்க: தமிழகத்தில் +2 மதிப்பெண் முறை: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்...

மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்கள், அவர்கள் விரும்பினால் தேர்வு எழுதலாம் என்றும் சிபிஎஸ்இ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்  நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் ஜூலை 15ம் தேதிக்குள் முடிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஜூலை 31ம் தேதி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: