ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாத புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு பாடமெடுக்கும் தெலுங்கானா பெண்!

மாதிரி படம்

தினசரி காலை மற்றும் மாலை நேரத்தில் சுற்றுப்புறத்தில் உள்ள ஏழை எளிய குழந்தைகளுக்கு பாடம் கற்றுக்கொடுக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    வனஜா என்ற 24 வயது பெண் தனது இடைநிலைப் படிப்பை முடித்தவுடன் அவரது தந்தை காலமாகிவிட்டார். வனஜாவும், அவரது தாயும் தங்கள் வாழ்க்கையை சமாளிக்க உள்ளூரில் ஒரு கடையை எடுத்து நடத்த தொடங்கினர். தெலுங்கானாவில் உள்ள ஹனம்கொண்டாவில் வசிக்கும் வனஜா, வாழ்க்கையில் கஷ்டப்படும் சிலருக்கு உதவ நினைத்தார். ஹனம்கொண்டாவில் உள்ள ஏசியன் மால் அருகே ஒரு திறந்த இடத்தில் தினசரி காலை மற்றும் மாலை நேரத்தில் சுற்றுப்புறத்தில் உள்ள ஏழை எளிய குழந்தைகளுக்கு பாடம் கற்றுக்கொடுக்கிறார்.

    மொத்தம் 20 பேர் கொண்ட ஒரு சிறிய குழுவிற்கு வனஜா பாடம் எடுக்கிறார் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வனஜா பாடம் எடுக்கும் குழந்தைகள் அனைவரும் லோயர் கே.ஜி முதல் 3ம் வகுப்பு வரை உள்ளனர், பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் அந்த ஏழை எளிய மாணவர்களால் ஸ்மார்ட்போனை வாங்க இயலவில்லை. இந்த குழந்தைகள் அனைவரும் இப்பகுதியை சேர்ந்தவர்கள் அல்லது வேறு பகுதியில் இருந்து குடியேறியவர்கள். அவர்களது குடும்பங்கள் பெரும்பாலும் சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிராவை பூர்வீகமாக கொண்டது.

    அவர்களுக்கான கல்வி என்றென்றும் ஒரு போராட்டமாக இருந்து வருகிறது, ஏற்கெனவே அவர்களின் சமூக-பொருளாதார பின்னணி மிகவும் பலவீனமானது. இதற்கிடையில் இப்போது தொற்றுநோய், நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது. இதனால் தான் வனஜா இந்த குழந்தைகளுக்கு இலவசமாக பாடத்தை கற்பிக்க தீர்மானித்தார். இந்த குழந்தைகளின் குடும்பங்கள் கடந்த 2 தசாப்தங்களாக அரசு நிலத்தில் கட்டப்பட்ட ஒரு சேரி பகுதியில் குடிசைகளில் வசித்து வருகின்றனர். முதலில் தெலுங்கானாவில் உள்ள போங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த வனஜா, அதே சேரியில் வசித்தார்.

    “நான் படிக்கும்போதே என் தந்தை இறந்துவிட்டார், குடும்ப சூழ்நிலை காரணமாக என் அம்மா எனக்கு ஒரேவேளை உணவை வழங்குவார். நானும் தாயுடன் சேர்ந்து எங்கள் கடையை கவனித்துகொள்வேன். அதனால் என்னால் என் கல்வியைத் தொடர முடியவில்லை, ”என்று அவர் TNIE இடம் கூறினார். அனைத்து துறைகளை போலவே, கல்வித் துறையும் தொற்றுநோய் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வகுப்புகளை ஆன்லைனில் எடுத்துவருகிறது. ஆனால் இந்த குழந்தைகளுக்கோ அடிப்படை வசதிகள் இல்லாததால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர், அவர்களில் பலர் பள்ளிகளை விட்டு நிறுத்தப்பட்டுள்ளனர்.

    Also read... 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடப்படாது

    வனஜா இந்த குழந்தைகளின் அவலத்தையும் அவர்களின் போராட்டங்களையும் புரிந்துகொண்டு அவர்களுக்கு தன்னால் முடிந்த அடிப்படைக் கல்வியை வழங்கிவருகிறார். இந்த குழந்தைகளில் நிறைய பேருக்கு முறையான உணவு கூட கிடைப்பதில்லை, பள்ளிகள் மூடப்பட்டதால், மதிய உணவு கூட நிறுத்தப்பட்டுள்ளது. "எனக்கு பாடம் எடுக்க வகுப்பறைகள் வழங்கப்படாவிட்டாலும், இந்த குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது எனது பொறுப்பு என்று நான் நம்புகிறேன்," என்று வனஜா செய்தி நிருபரிடம் கூறியுள்ளார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: