தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை!

வெளியூரில் வசிப்பவர்கள் பண்டிகையைக் கொண்டாட வசதியாக, சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

news18
Updated: October 10, 2019, 11:04 AM IST
தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை!
மாதிரிப்படம் (Reuters)
news18
Updated: October 10, 2019, 11:04 AM IST
தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகை வரும் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு முந்தைய நாளான 26-ம் தேதி சனிக்கிழமை பள்ளி வேலை நாள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

வெளியூரில் வசிப்பவர்கள் பண்டிகையைக் கொண்டாட வசதியாக, சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.


இதனை ஏற்று, 26-ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

மேலும் தீபாவளிக்கு அடுத்த நாளான 28-ம் தேதி திங்கள்கிழமை விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு முடிவு எடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அன்றைய தினம் விடுமுறை அறிவித்தால் அதனை ஈடுகட்டும் விதத்தில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

Loading...

Also see...

First published: October 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...