Home /News /education /

தமிழகத்தில் நாளை 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் நாளை 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

School leave

School leave

தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவம்பர் 18) தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகர்கிறது.

    இதனால் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்திற்கு நாளை ரெட் அலெர்ட் வானிலை ஆய்வுமையம் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் தீவிரத்தை பொறுத்து மற்ற மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனிடையே சென்னையில் கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக தங்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை இரண்டு நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளும்படி மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: School Leave

    அடுத்த செய்தி