முதலமைசச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்க வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு 'ஊஞ்சல் இதழ்', உயர் வகுப்பு மாணவர்களுக்கு 'தேன்சிட்டு இதழ்' மற்றும் ஆசிரியர்களுக்கு 'கனவு ஆசிரியர் ' மாத இதழை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஊஞ்சல் இதழில் பேருந்துகளை உவமையாக்கி இந்து முஸ்லீம் இடையே மோதல் என்றும் இல்லை என இரு மதங்களின் ஒற்றுமையை எடுத்துரைக்கும் வகையில் 'அன்பு' எனும் தலைப்பில் கதை வெளியிடப்பட்டுள்ளது.
'அன்பு' எனும் தலைப்பின் கதைச் சுருக்கம் : அகிலன் ,அப்துல்லா எனும் இரு பேருந்துகள் பட்டுக்கோட்டையிலிருந்து ,தஞ்சைக்கு செல்லும் ஒரே வழித்தடத்தில் செல்லும் இரு பேருந்துகளும் பேசிக்கொள்ள வேண்டும்,நட்பு பாராட்ட வேண்டும் என்று நினைக்கும்.
பேருந்து நிறுத்தங்களில் நிற்கும்போதெல்லாம் இரு பேருந்துகளும் வணக்கம் செலுத்த நினைக்கும். ஆனால், அதன் நடத்துனர்கள் விசிலடித்து விடுவதால் அது நடக்காமல் இருந்தது. ஒரு நாள் ஒன்றன்பின் ஒன்றாக இரு பேருந்துகளும் செல்லும் போது திடீரென ஏற்ப்பட்ட விபத்தில் அகிலன் பேருந்து அப்துல்லா பேருந்து மீது மோதிவிட்டது. தனியாக சந்திக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசைப்பட்டு இரண்டு பேருந்துகளும் தனியாக சந்தித்து மகிழ்ந்தனர்.
விபத்து நடந்ததால் பயணிகள் எல்லாம் பதட்டத்தில் இருந்தபோது பேருந்துகள் இரண்டும் நாங்கள் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொள்ளவில்லை நண்பர்களாகவே இருக்கின்றோம். அன்பாக தொட்டுக் கொண்டோம் அவ்வளவுதான் என்று சத்தம் போட்டு கூறின. ஆனால், பேருந்துகள் சொன்னது பயணிகள் யாருக்கும் புரியவில்லை உங்களுக்கு புரிகிறதா என கதை முடிந்துள்ளது.
இதையும் வாசிக்க: ராணுவ கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர நுழைவுத் தேர்வு அறிவிப்பு :யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
இதில் உவமையாக காட்டப்பட்டுள்ள இரண்டு பேருந்துகளும் இரண்டு மதங்கள் என புரிந்து கொண்டால் இரு மதங்களுக்கிடையே மோதல் உள்ளதாக தவறாக புரிந்து கொள்ளப்படுவதாகவும் தாங்கள் என்றும் மோதிக்கொள்ளவில்லை அன்பாக இருப்பதாகவும் மோதிக் கொள்வதாக தவறாக புரிந்து கொள்ளப்படுவதாக இக்கதை விளக்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Department of School Education, Govt School, MK Stalin