Home /News /education /

Hijab Controversy: ஹிஜாப் அணிந்த மாணவிகள் தேர்வு எழுதக்கூடாது என எப்படி கூறலாம்? - கர்நாடக அமைச்சருக்கு அனைத்திந்திய வழக்கறிஞர் சங்கம் நோட்டீஸ்

Hijab Controversy: ஹிஜாப் அணிந்த மாணவிகள் தேர்வு எழுதக்கூடாது என எப்படி கூறலாம்? - கர்நாடக அமைச்சருக்கு அனைத்திந்திய வழக்கறிஞர் சங்கம் நோட்டீஸ்

05.02.2022 தேதியிட்ட அறிவிப்பில் ஒட்டுமொத்தமாக ஹிஜாப் உடை அணிய தடைவிதிக்கப்ப்படவில்லை. பள்ளிச்சீருடை தொடர்பான முடிவுகளை அந்தந்த பள்ளிகள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.

05.02.2022 தேதியிட்ட அறிவிப்பில் ஒட்டுமொத்தமாக ஹிஜாப் உடை அணிய தடைவிதிக்கப்ப்படவில்லை. பள்ளிச்சீருடை தொடர்பான முடிவுகளை அந்தந்த பள்ளிகள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.

05.02.2022 தேதியிட்ட அறிவிப்பில் ஒட்டுமொத்தமாக ஹிஜாப் உடை அணிய தடைவிதிக்கப்ப்படவில்லை. பள்ளிச்சீருடை தொடர்பான முடிவுகளை அந்தந்த பள்ளிகள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாதது சட்ட விரோதமானது என்றும், உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்றும் நீதிக்கான அனைத்திந்திய வழக்கறிஞர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் மாநில கல்வி அமைச்சர் முறையாக விளக்கமளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

கர்நாடக அரசு 05.02.2022 அன்று கல்விக்கூடங்களில் மாணவர்கள் அணியும் சீருடை தொடர்பாக அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில்,  கர்நாடகா கல்விச் சட்டம், 1983ன் பிரிவு 133(2)ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களும் அரசு நிர்ணயித்த சீருடையை அணியுமாறு அறிவுறுத்துகிறோம். தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளி நிர்வாகக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட சீருடைகளை அணியலாம்.

கர்நாடகா பல்கலைக்கழக முன் கல்லூரி வாரியத்தின் (Karnataka Board of Pre-University Education) கீழ் வரும் கல்வி  நிறுவனங்களில், கல்லூரி வளர்ச்சிக் குழு (அ) நிர்வாக மேற்பார்வைக் குழுவால் பரிந்துரைக்கப்படும் சீருடையை கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும். நிர்வாகம் சீருடையை நிர்ணயிக்கவில்லை என்றால், சமத்துவம், ஒருமைப்பாடு, பொது ஒழுங்கு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் இல்லாத ஆடைகளை அணியலாம்.

ஹிஜாப் வழக்கு


மாநில அரசின் இந்த அரசாணையைத் தொடர்ந்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள் பள்ளிச் சீருடையை நிர்ணயம் செய்தனர். குறிப்பாக, கல்விக்கூடங்களில் இசுலாமியப் பெண்கள் தங்களது மார்க்கத்தின் படி ஹிஜாப் உடை உடுத்திச் செல்வதற்கு தடை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், " ஹிஜாப் என்பது இசுலாமிய மத வழக்கமென்பதற்கு எவ்விதச் சான்றுகளும் இல்லையெனவும், இசுலாமியார்களின் ஆடையுரிமைக்கு எத்தகைய முன்ஆதாரமும் இல்லையெனத் தெரிவித்தது. இதன் அடிப்படையில், 05.02.2022 தேதியிட்ட கர்நாடாக அரசின் உத்தரவை ரத்து செய்ய முடியாது என்றும் தீர்ப்பளித்தது.

இந்த சூழலில் கடந்த மார்ச் 28-ம்தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் தொடங்கியது. தேர்வுக்கு சில தினங்களுக்கு முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில கல்வித்துறை அமைச்சர்," ஹிஜாப் உடை உடுத்தி  மாணவர்கள் தேர்வறைக்குள் நுழைய வேண்டாம். அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு ஹிஜாப் உடை உடுத்தி வந்த இசுலாமிய மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாணவிகள் தேர்வை புறக்கணித்துள்ளனர். சில பள்ளிகளில் ஹிஜாப்புடன் மாணவிகள் தேர்வெழுதியதாக தகவல் வெளியான‌து.

மாதிரிப்படம்


இதுகுறித்து விசாரணை நடத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தர விட்டது. இதன்பேரின் நடத்தப்பட்ட‌ விசாரணையில் கதக் மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இதற்கு காரணமான 2 தேர்வு பார்வையாளர்கள் மற்றும் 7 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட துணை முதன்மை கல்வி அதிகாரி பசவலிங்கப்பா தெரிவித்துள்ளார்.

வக்கீல் நோட்டிஸ்: 

இந்நிலையில், ஹிஜாப் அணிந்த மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாதது சட்ட விரோதமானது என்றும், உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்றும் நீதிக்கான அனைத்திந்திய வழக்கறிஞர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, விளக்கம் கேட்டு மாநில அமைச்சருக்கும் வக்கீல் நோட்டிஸ் ஒன்றையும் அனுப்பியுள்ளது. அதில்," 05.02.2022 தேதியிட்ட அறிவிப்பில் ஒட்டுமொத்தமாக ஹிஜாப் உடை அணிய தடைவிதிக்கப் படவில்லை. பள்ளிச்சீருடை தொடர்பான முடிவுகளை அந்தந்த பள்ளிகள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. மேலும், நிர்வாகம்  பள்ளிச் சீருடையை நிர்ணயிக்கவில்லை,  தகுந்த உடையை அணிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகா உயர்நீதிமன்றமும் ஒட்டுமொத்தமாக ஹிஜாப் உடை அணிந்து கொள்ள தடை விதிக்கவில்லை. பள்ளிச் சீருடை தொடர்பாக 05.02.2022 தேதியிட்ட அரசின் ஆணைக்கு தடை விதிக்க முடியாது என்று மட்டுமே தெரிவித்துள்ளது. மேலும், வகுப்பறைக்குள் மட்டுமே ஆடைக் கட்டுப்பாடு பொருந்தும் என்பதையும், வகுப்பறைக்கு வெளியே பெண்களின் கல்வி மற்றும் சம உரிமையை எந்தளவிலும் பாதிக்காது என்பதையும் தெளிவுபடுத்தியது.

எனவே, ஹிஜாப் உடை உடுத்தி  மாணவர்கள் தேர்வறைக்குள் நுழைய வேண்டாம். அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற கல்வி அமைச்சரின் கருத்து மிகவும் தவறானது, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது. ஆயிரக்கணக்கான இசுலாமிய மாணவிகளின் உணர்வுகளையும், உரிமைகளையும் காயப்படுத்துவதாக உள்ளது" என்று தெரிவித்துள்ளது.
Published by:Salanraj R
First published:

Tags: Education, Hijab, Karnataka

அடுத்த செய்தி