ஹோம் /நியூஸ் /கல்வி /

நான் முதல்வன் : 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்ப பாடத்தை பதிவு செய்ய உத்தரவு

நான் முதல்வன் : 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்ப பாடத்தை பதிவு செய்ய உத்தரவு

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

நான் முதல்வன் இணையத்தில் பதிவு செய்வதால், எதிர் வரும் தங்கள் விருப்ப நுழைவுத் தேர்வுகளைத் தவற விடாமல் விண்ணப்பிக்கவும் அவற்றுக்கு தயார் செய்துக் கொள்ள முடியும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur), India

12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி படிப்பில் தங்களுக்கு விரும்பும் 3 விருப்ப பாடங்களை 23 ந் தேதிக்குள்

நான் முதல்வன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியிள்ள கடிதத்தில், பள்ளிக் கல்வித் துறையில் இந்தாண்டு 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உயர்கல்வி படிப்புகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் அவர்கள் உத்தேசமான உயர் கல்வி விருப்பப் பாடம் மற்றும் அப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் இருப்பின் அவற்றுக்கு பள்ளிக் கல்வித் துறையின் நான் முதல்வன் இணைய தளத்தில் பதிவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், இந்தாண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் நான் முதல்வன் இணைய தளத்தில் உள் நுழைந்து (Login) தனக்கான லிங்கை கிளிக் செய்து அதில் கோரப்பட்டுள்ள விவரங்களும், 3 விருப்பப் பாட பிரிவுகளையும் அவற்றுக்கு நுழைவுத் தேர்வுகள் இருப்பின் அவற்றையும் வரும் 23 ந் தேதிக்குள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் , அனைத்து மாணவர்களும் விருப்பப்பாடங்களை தேர்வு செய்ய வேண்டும். அதனை பள்ளித் தலைமை ஆசிரியர் உறுதி செய்தல் வேண்டும்.

மேலும், இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான உயர் கல்வி சார்ந்த பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் உயர்கல்வித் துறையினரால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அனைத்து 12ஆம் வகுப்பு மாணவர்களும் நான் முதல்வன் இணையத்தில் பதிவு செய்வதால், எதிர் வரும் தங்கள் விருப்ப நுழைவுத் தேர்வுகளைத் தவற விடாமல் விண்ணப்பிக்கவும் அவற்றுக்கு தயார் செய்துக் கொள்ள முடியும்.  எனவே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் நடப்பாண்டில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வியை பயில்வதில் தடையின்றி செல்வதற்கு உறுதி செய்திட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: School education department