தேசிய புதிய கல்விக் கொள்கைக்கு பதிலாக மாநில கல்விக் கொள்கை அமைக்க குழு - அமைச்சர் பொன்முடி தகவல்
தேசிய புதிய கல்விக் கொள்கைக்கு பதிலாக மாநில கல்விக் கொள்கை அமைக்க குழு - அமைச்சர் பொன்முடி தகவல்
அமைச்சர் பொன்முடி
TN State Education Policy | உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் ஏற்படுத்தும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய புதிய கல்விக் கொள்கைக்கு பதிலாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் மற்றும் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் இணைந்து தேசிய அறிவியல் மற்றும் கணித தினத்தை முன்னிட்டு இரண்டு நாள் கருத்தரங்கு சென்னை லயோலா கல்லூரியில் இன்று தொடங்கியது.
கருத்தரங்கை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, தேசிய புதிய கல்விக் கொள்கைக்கு பதிலாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு புதிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.